Thattatum Kaigal |
---|
ஹோய் தட்டட்டும் கைகள்
மெல்ல தாளக்கட்டோடு
தட்டட்டும் கைகள்
மெல்ல தாளக்கட்டோடு
பேசட்டும் கண்கள் இந்தப் பருவச் சிட்டோடு
பேசட்டும் கண்கள் இந்தப் பருவச் சிட்டோடு
நித்தம் நித்தம் சந்திப்பு
நெஞ்சும் நெஞ்சும் சிந்திப்பு
காலை மாலை காதல் ராகம்
பாடச்சொல்லும் பெண்
தட்டட்டும் கைகள்
மெல்ல தாளக்கட்டோடு
பேசட்டும் கண்கள் இந்தப் பருவச் சிட்டோடு
பிறந்த மேனி குளிர் நிலவாக
திறந்த பார்வை கொடி மலராக
மலர்ந்த பருவம் சிலை அழகாக
வளர்ந்து வந்தேன் நான் கலையழகாக
ஆண்டொன்று போகும்
வயதொன்று கூடும்
ஆண்டொன்று போகும்
வயதொன்று கூடும்
இளமையும் அழகும்
நிலையாய் வாழும்
ஹோய் தட்டட்டும் கைகள்
மெல்ல தாளக்கட்டோடு
பேசட்டும் கண்கள் இந்தப் பருவச் சிட்டோடு