Theriyum Theriyum

Theriyum Theriyum Song Lyrics In English


தெரியும் தெரியும் விஷயம் தெரியும்
காலம் வந்தா கனிந்து கைகூடும்
இனி கனிந்து கை கூடும் அது விரைந்து கை சேரும்

தெரியும் தெரியும் விஷயம் தெரியும்
காலம் வந்தா கனிந்து கைகூடும்
இனி கனிந்து கை கூடும் அது விரைந்து கை சேரும்
உறவு வரவு நீயே செல்வம்
உறவு வரவு நீயே செல்வம்

கள்ளூறும் பூ முடித்து வா
அடி தங்கக்கட்டி சொல்லாமல் நான் எடுக்கவா
அடி பேதைப் பெண்ணே
கள்ளூறும் பூ முடித்து வா
அடி தங்கக்கட்டி சொல்லாமல் நான் எடுக்கவா

நான் ஆளாகி நாளாகி நின்றேன்
இன்று பாலாகி தேனாகி வந்தேன்

பாலுக்குள்ளே நெய்யைத் தேடி
நெய்யை வைத்த கையைத் தேடி
கையில் வைத்த மையைத் தேடி வந்தேனே ஓடி
உறவு வரவு நீயே செல்வம்



உன்னோடு காத்திருக்கவோ
எது நேரம் என்று
பொன் வேளை பார்த்திருக்கவோ
நீ சம்சாரம் இல்லாத ராஜா நான்
சந்தோஷம் கொண்டாடும் ரோஜா

அல்லித் தண்டு நீதானம்மா
அள்ளிக் கொண்டு போவேனம்மா
நேரம் கண்டு நின்றேனம்மா
துள்ளாதே சும்மா
உறவு வரவு நீயே செல்வம்


நெஞ்சோடு நீ இணைந்தாயே
என் பார்வை பட்டு அன்றாடம் நீ நனைந்தாயே
என் காதல் கண்ணா
நெஞ்சோடு நீ இணைந்தாயே
என் பார்வை பட்டு அன்றாடம் நீ நனைந்தாயே

இனி அச்சாரம் தந்தாக வேண்டும்
உன் முத்தாரம் வந்தாக வேண்டும்

தொட்டுத் தொட்டு மாளாதுங்க
தங்கச் சிட்டு தாளாதுங்க
கட்டிக் கொண்டு நீராடுங்க கட்டாயம் வாங்க

உறவு
வரவு
நீயே
செல்வம்

தெரியும் தெரியும் விஷயம் தெரியும்
காலம் வந்தா கனிந்து கைகூடும்
இனி கனிந்து கை கூடும் அது விரைந்து கை சேரும்

உறவு
வரவு
நீயே
செல்வம்