Therku Thesa Kaathu |
---|
தெக்கு தெசக் காத்து
தேடி வந்து வீச
பத்து வகப் பாட்டு
நானெடுத்துப் பாட
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
தெக்கு தெசக் காத்து
தேடி வந்து வீச
பத்து வகப் பாட்டு
நானெடுத்துப் பாட
எப்பவும் நீ எனக்கு
என் உசுரப் போல
பக்கமா நான் இருப்பேன்
உன் நெழலில் வாழ
தெக்கு தெசக் காத்து
தேடி வந்து வீச
பத்து வகப் பாட்டு
நானெடுத்துப் பாட
என் கை புடிச்சு நீ நடந்த
கால்கள் கொஞ்சம் ஓயும் வர
ஒன் கை புடிச்சு நான் நடந்தா
தூரத்துக்கு எல்லை இல்ல
என் மடியில் நீ உறங்கு
உன் அலுப்பு தீரும் வர
உம் மடியில் நான் இருப்பேன்
என் வாழ்க்க தீரும் வர
எட்டுத் தெச நான் ஜெயிச்சு
கட்டி வெச்ச கோட்டையில
எப்பவும் நீ மகராச
நான் இருப்பேன் சேவகனா
நீ இருந்தா போதும் என்னோட
ஒரு மலையக் கூட
நான் சுமப்பேன் தோளில் தன்னால
தெக்கு தெசக் காத்து
தேடி வந்து வீச
பத்து வகப் பாட்டு
நானெடுத்துப் பாட
கரிசக் காட்டு தரிசுக்குள்ள
மெத்த மழை பேஞ்சதையா
மெத்த மழை பேஞ்சதுல
சொந்தம் ஒன்னு வந்ததையா
வந்த சொந்தம் ஆசையுடன்
நேசம் வெச்சு சேந்ததையா
நேசத்துக்கு சாட்சி சொல்ல
வாச முல்ல பூத்ததையா
மகனே ஒன் ஒறவு
நான் ஒறங்கும் ஆலமரம்
தனியா நான் இருந்தா
நாதி இல்லா வேல மரம்
ஒன் ஒறவு போதுமையா மகனே
அது ஒன்னிருந்தா
ஊர் உறவு சேந்து வரும் மகனே
தெக்கு தெசக் காத்து
தேடி வந்து வீச
பத்து வகப் பாட்டு
நானெடுத்துப் பாட
எப்பவும் நீ எனக்கு
என் உசுரப் போல
பக்கமா நான் இருப்பேன்
உன் நெழலில் வாழ