Tholin Azhagadiyo Thulli Varum

Tholin Azhagadiyo Thulli Varum Song Lyrics In English


தோலின் அழகடியோ
துள்ளி வரும் உடலடியோ
பால் போல் முகமடியோ
பருவமென்னும் சுகமடியோ

நாலும் இழந்த பின்னே
நானிருக்கும் நிலையடியோ
நடமாடும் திமிர்களுக்கு
நாயகனின் கலையடியோ

பச்சை வயலினில் வாலைப் பெண்ணே
ஒரு பறவை பறந்து வாலைப் பெண்ணே
பச்சை வயலினில் வாலைப் பெண்ணே
ஒரு பறவை பறந்து வாலைப் பெண்ணே
அச்சமில்லாமலே ஓடியதால்
இன்று அம்பலம் ஏறுது வாலைப் பெண்ணே
அச்சமில்லாமலே ஓடியதால்
இன்று அம்பலம் ஏறுது வாலைப் பெண்ணே

பச்சை வயலினில் வாலைப் பெண்ணே
ஒரு பறவை பறந்து வாலைப் பெண்ணே

சத்தியம் விட்டது வாழ்க்கையிலே
அது தர்மம் மறந்தது ஆசையிலே
சத்தியம் விட்டது வாழ்க்கையிலே
அது தர்மம் மறந்தது ஆசையிலே
அத்தனையும் இன்று தத்துவமானது
ஆண்டவனார் தந்த மேனியிலே
அத்தனையும் இன்று தத்துவமானது
ஆண்டவனார் தந்த மேனியிலே

பச்சை வயலினில் வாலைப் பெண்ணே
ஒரு பறவை பறந்து வாலைப் பெண்ணே
அச்சமில்லாமலே ஓடியதால்
இன்று அம்பலம் ஏறுது வாலைப் பெண்ணே

ஆறு குளங்களில் நீந்துமடி
இது ஆனந்தம் என்றதைக் கூறுமடி
ஆறு குளங்களில் நீந்துமடி
இது ஆனந்தம் என்றதைக் கூறுமடி
நூறு குளங்களில் நீந்தியபின்
அது நோயுறும் ஆற்றில் குளிக்குதடி
நூறு குளங்களில் நீந்தியபின்
அது நோயுறும் ஆற்றில் குளிக்குதடி
ஹாஹாஹ் ஹஹஹ்ஹா

பச்சை வயலினில் வாலைப் பெண்ணே
ஒரு பறவை பறந்து வாலைப் பெண்ணே
அச்சமில்லாமலே ஓடியதால்
இன்று அம்பலம் ஏறுது வாலைப் பெண்ணே


பச்சை வயலினில் வாலைப் பெண்ணே
ஒரு பறவை பறந்து வாலைப் பெண்ணே

மங்கலம் விட்டது குங்குமம் விட்டது
மஞ்சளும் விட்டதடி
மங்கலம் விட்டது குங்குமம் விட்டது
மஞ்சளும் விட்டதடி
அது மானமும் விட்டது ஞானமும் விட்டது
வாழ்வையும் விட்டதடி

கொஞ்ச வயதினில் கொஞ்சி மகிழ்ந்தது
கோலம் இழந்ததடி
கொஞ்ச வயதினில் கொஞ்சி மகிழ்ந்தது
கோலம் இழந்ததடி
இன்று கோயிலின் வாசலில் நின்றதடி
ஒரு கொள்கை இல்லாதபடி
இன்று கோயிலின் வாசலில் நின்றதடி
ஒரு கொள்கை இல்லாதபடி

தாலியிருக்கின்ற தாரங்களுக்கு
ஒரு சத்தியம் உண்டடியோ
குல தர்மம் மறந்தவள் வீதிக்கு வந்ததும்
தத்துவம் தானடியோ
இது வேலியைத் தாண்டிய வெள்ளாடு
இனி வேறிடம் ஏதடியோ
இது வேலியைத் தாண்டிய வெள்ளாடு
இனி வேறிடம் ஏதடியோ
அடி வெள்ளை மனம் கொண்ட
தோழி என் பாதையை உள்ளத்தில் வையடியோ
அடி வெள்ளை மனம் கொண்ட
தோழி என் பாதையை உள்ளத்தில் வையடியோ

கட்டழகு எத்தனை நாள் வாலைப் பெண்ணே
அது கடவுளுக்குத்தான் தெரியும் வாலைப் பெண்ணே
கட்டழகு எத்தனை நாள் வாலைப் பெண்ணே
அது கடவுளுக்குத்தான் தெரியும் வாலைப் பெண்ணே
கட்டயவன் ஒருவனுக்கு வாழ்க்கைப் பட்டால் ஆஅஆ
கட்டயவன் ஒருவனுக்கு வாழ்க்கைப் பட்டால்
அந்தக் கடவுளையும் வென்றிடலாம் வாலைப் பெண்ணே

இப்பொழுது புரிகிறது வாலைப் பெண்ணே
கண்ணில் ஏதேதோ தெரிகிறது வாலைப் பெண்ணே
அப்பொழுது ரத்தத்தில் ஆர்ப்பாட்டம் இருந்ததடி
அப்பொழுது ரத்தத்தில் ஆர்ப்பாட்டம் இருந்ததடி
அடுத்த கதை புரியவில்லை வாலைப் பெண்ணே

கெட்ட பின்பு ஞானம் வரும் வாலைப் பெண்ணே
நானும் பட்டினத்தார் ஆகிவிட்டேன் வாலைப் பெண்ணே
கெட்ட பின்பு ஞானம் வரும் வாலைப் பெண்ணே
நானும் பட்டினத்தார் ஆகிவிட்டேன் வாலைப் பெண்ணே
விட்டுவிடப் போகுதுயிர் விட்ட பின்னே நீயிருந்து
சுட்டு விட வேண்டுமடி வாலைப் பெண்ணே
சுட்டு விட வேண்டுமடி வாலைப் பெண்ணே