Unakkena Naan |
---|
உனக்கென நான்
எனக்கென நீ நினைக்கையில்
இனிக்குதே உடலென நான்
உயிரென நீ இருப்பது
பிடிக்குதே
உனதுயிராய் எனதுயிரும்
உலவிட துடிக்குதே தனியொரு
நான் தனியொரு நீ நினைக்கவும்
வலிக்குதே
இதயத்தை எதற்காக
எதற்காக இடம் மாற்றினாய்
இனிக்கும் ஒரு துன்பத்தை
குடியேற்றினாய்
புதுமைகள் தந்து
மகிழ்ச்சியில் என்னை
ஆழ்த்த பரிசுகள் தேடி
பிடிப்பாய்
கசந்திடும் சேதி
வந்தால் பகிர்ந்திட பக்கம்
நீ இருப்பாய் நோயென
கொஞ்சம் படுத்தால் தாய்
என மாறி அணைப்பாய்
உனது காதலில் விழுந்தேன்
அருகினில் வா
அருகினில் வா இடைவெளி
வலிக்குதே உனதுயிரில்
எனதுயிரை ஊற்றிட
துடிக்குதே
நானென நீ நீ
என நான் இணைந்திட
பிடிக்குதே புது உலகம்
புது சருகம் படைத்திட
தவிக்குதே
மழை வெயில்
காற்றோடு பூகம்பம்
வந்தாலுமே உனதுமடி
நான் தூங்கும் வீடாகுமே
அருகினில் வந்து
மடியினில் சாய்ந்து படுத்தால்
மெல்லிய குரலில் இசைப்பாய்
மார்பினில் முகத்தை
புதைத்தால் கூந்தலை கோதி
கொடுப்பாய் அணைப்பினில்
மயங்கி கிடந்தால் அசைந்திட
கூட மறுப்பாய் உனது காதலில்
விழுந்தேன்
மரணமே பயந்திடும்
தூரத்தில் நாமும் வாழ்கின்றோம்
மனித நிலை தாண்டி
போகிறோம் இனி நமக்கென்றும்
பிரிவில்லையே ஓஹோ ஹோ
பிரிவில்லையே
எனக்கென எதுவும்
செய்தாய் உனக்கென என்ன
நான் செய்வேன் பொங்கிடும்
நெஞ்சின் உணர்வை சொல்லவும்
வார்த்தை போதாதே
விழிகளின் ஓரம்
துளிர்க்கும் ஒரு துளி நீரே
சொல்லட்டும் உனது
காதலில் விழுந்தேன்
உனக்கென நான்
எனக்கென நீ நினைக்கையில்
இனிக்குதே உடலென நான்
உயிரென நீ இருப்பது
பிடிக்குதே