Unnai Vidamaaten |
---|
உன்னை விட மாட்டேன்
காதல் வரம் கேட்டேன்
உன்னை விட மாட்டேன்
காதல் வரம் கேட்டேன்
தந்திடு கண்ணா
சின்னஞ்சிறு மாது
கண்ணில் விடும் தூது
வந்திடு கண்ணா
உயிர் காதலன் நீயாக
உந்தன் காதலி நானாக
இன்பங்கள் தேனாக
இங்கு பொங்கட்டும் தானாக
பனிவாடையில் வாடுது
வாசனைப் பூச் செண்டு ஹேய்
உன்னை விட மாட்டேன்
காதல் வரம் கேட்டேன்
தந்திடு கண்ணா
சின்னஞ்சிறு மாது
கண்ணில் விடும் தூது
வந்திடு கண்ணா
மெல்லிடையை தொட்டுத் தொட்டு
மெல்லிசையில் மெட்டுக் கட்டு
தட்டத் தட்டத் தாளம் தட்டும்
பூங்காற்று தான்
முன்னும் பின்னும் சொட்டச் சொட்ட
முத்த மழை கொட்டக் கொட்ட
பொங்கிப் பொங்கிப் பாயும்
இந்த நீர் ஊற்றுதான்
ஓடை என நான் ஆட
ஓடம் என நீ ஆட
ஊஞ்சல் மனம் போராட
ஒட்டிக் கொண்டு நீராட
தீராது ஆசைகள்
இங்கு ஓயாது ஓசைகள்
நீ ஒன்றல்ல ரெண்டல்ல
முன்னூறு தந்தாலும் போதாது
உன்னை விட மாட்டேன்
காதல் வரம் கேட்டேன்
தந்திடு கண்ணே
சின்னஞ்சிறு மாது
கண்ணில் விடும் தூது
வந்தது கண்ணே
உயிர் காதலி நீயாக
உந்தன் காதலன் நானாக
இன்பங்கள் தேனாக
இங்கு பொங்கட்டும் தானாக
பனிவாடையில் வாடுது
வாசனைப் பூச் செண்டு ஹா ஹேய்
உன்னை விட மாட்டேன்
காதல் வரம் கேட்டேன்
தந்திடு கண்ணே
சின்னஞ்சிறு மாது
கண்ணில் விடும் தூது
வந்தது கண்ணே
பஞ்சணையின் வேதம் என்ன
பள்ளியறைக் கல்வி என்ன
உன்னிடத்தில் வெட்கம் விட்டு
நான் கேட்பதா
என்னவென்று நானும் சொல்ல
என்னிடத்தில் கற்றுக் கொள்ள
இன்னமும் நீ பஞ்சாங்கத்தில்
நாள் பார்ப்பதா
கண்கள் படும் அங்கங்கள்
கைகள் பட தள்ளாடும்
வாய் வெடித்த பூ என்றால்
வண்டு வந்து உள்ளாடும்
என் உள்ளம் உன்னோடு
மனம் வந்தாடும் பின்னோடு
நம் நேசங்கள் நெஞ்சங்கள்
யார் என்ன சொன்னாலும் நீங்காதே
உன்னை விட மாட்டேன்
காதல் வரம் கேட்டேன்
தந்திடு கண்ணா
சின்னஞ்சிறு மாது
கண்ணில் விடும் தூது
வந்திடு கண்ணா
உயிர் காதலி நீயாக
உந்தன் காதலன் நானாக
இன்பங்கள் தேனாக
இங்கு பொங்கட்டும் தானாக
பனிவாடையில் வாடுது
வாசனைப் பூச் செண்டு ஹா ஹேய்
உன்னை விட மாட்டேன்
காதல் வரம் கேட்டேன்
தந்திடு கண்ணா
சின்னஞ்சிறு மாது
கண்ணில் விடும் தூது
வந்தது கண்ணே