Unnidathil Ennai Koduthen |
---|
இசை அமைப்பாளர் : எம் எஸ் விஸ்வநாதன்
உன்னிடத்தில்
என்னை கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும்
அள்ளி தெளித்தேன்
உறவினில் விளையாடி வரும்
கனவுகள் பல கோடி
உறவினில் விளையாடி வரும்
கனவுகள் பல கோடி
உன்னிடத்தில்
என்னை கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும்
அள்ளி தெளித்தேன்
காற்றில் ஆடும் மாலை
என்னை பெண்மை என்றது
காதல் ஒன்றுதானே
வாழ்வில் உண்மை என்றது
இதழுடன் இதழாட
நீ இளமையில் நடமாடு
நினைத்தால் போதும் வருவேன்ஆஆ
தடுத்தால் கூட தருவேன்
உன்னிடத்தில்
என்னை கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும்
அள்ளி தெளித்தேன்
வெள்ளம் செல்லும் வேகம்
எந்தன் உள்ளம் சென்றது
வேகம் வந்த நேரம்
இன்ப இல்லம் கண்டது
இனி ஒரு பிரிவேது
அந்த நினைவுக்கு முடிவேது
இரவும் பகலும் கலையேஆஅ
இருவர் நிலையும் சிலையே
உன்னிடத்தில்
என்னை கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும்
அள்ளி தெளித்தேன்
ஊடல் கொண்ட பெண்மை
அங்கே தனியே நின்றது
கூடல் கொள்ள மன்னன்
உள்ளம் அருகே வந்தது
என்னடி விளையாட்டு என்று
சொன்னவன் மொழி கேட்டு
ஆசையில் விழுந்தேன் அங்கேஆஅ
காலையில் கனவுகள் எங்கே
உன்னிடத்தில்
என்னை கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும்
அள்ளி தெளித்தேன்
உறவினில் விளையாடி வரும்
கனவுகள் பல கோடி
உன்னிடத்தில்
என்னை கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும்
அள்ளி தெளித்தேன்