Vaadi Samanja |
---|
வா வா வா வா வாடி
வாடி சமஞ்ச புள்ள
அடி வெளஞ்ச கரும்புக் கொல்ல
வாடி சமஞ்ச புள்ள
அடி வெளஞ்ச கரும்புக் கொல்ல
எலி வாலு போல
சடை எம்புதடி மேலே
எலி வாலு போல
சடை எம்புதடி மேலே
உன்ன எந்த பையன்
கட்டிக்குவான்டி
வாடி சமஞ்ச புள்ள
அடி வெளஞ்ச கரும்புக் கொல்ல
சீவி சிடுக்கெடுத்து
நீ சிங்காரம் பண்ணிக்கடி
ராணி ரதியாட்டமா
உன்ன நீயேதான் எண்ணிக்கடி
எவதான் பெத்தாளோ
இந்த ஒடம்ப
எதுக்கும் ஆகாத தென்னங்குரும்ப
தோள்ள விழுந்த
தோண்டி உனக்கு
கொள்ள நெனப்பு
ஏன்டி உனக்கு
அடியே அசடு
அடியே அசடு
கண்டபடி திட்டபோறேன்
வாடி சமஞ்ச புள்ள
அடி வெளஞ்ச கரும்புக் கொல்ல
எலி வாலு போல
சடை எம்புதடி மேலே
உன்ன எந்த பையன்
கட்டிக்குவான்டி
வானத்திலே போகுது பார்
மச்சான் வூட்டு ஏரோப்ளேன்
மாலையோட மரிக்கொழுந்தே
உன்ன மேகத்திலே தேடிப்போறான்
ராசா நெனப்புலதான்
நீ ராத்திரி படுத்துக்கடி
காதல் கல்யாணத்த
நீ கனவுல முடிச்சுக்கடி
ராசா நெனப்புலதான்
நீ ராத்திரி படுத்துக்கடி
காதல் கல்யாணத்த
நீ கனவுல முடிச்சுக்கடி
உறவும் ஊராரும் சுத்தி இருக்க
வருவான் சப்பாணி உன்ன மணக்க
என்ன தெரியும்
கேணி தவளை
ஏன்டி உனக்கு
தாலி கவலை
அடியே அசடு
அடியே அசடு
கண்டபடி திட்டபோறேன்
வாடி சமஞ்ச புள்ள
அடி வெளஞ்ச கரும்புக் கொல்ல
எலி வாலு போல
சடை எம்புதடி மேலே
உன்ன எந்த பையன்
கட்டிக்குவான்டி
வாடி சமஞ்ச புள்ள
அடி வெளஞ்ச கரும்புக் கொல்ல