Vanthal Puguntha Vasal

Vanthal Puguntha Vasal Song Lyrics In English

பாடலாசிரியர் : வாலி

ஆஆஆஹ்ஆஆ அஆஅஆஆஆஆஹ்

வந்தால் புகுந்த வாசல் விளங்க மகாலட்சுமியே பொன் தாலியோடும் திலகத்தோடும் மாலை சூடியே மஞ்சள் பூசியே

பொன் மஞ்சள் சுமந்து மாலை சுமந்து வந்தால் மணமகள் இவள் நூறு ஆண்டு தலைவனோடு வாழும் பூங்கிளி தீர்க்க சுமங்கலி

அத்தை என்று அவள் உனக்கு ஆன பின்னாலும் பெற்றெடுத்த தாயெனவே நினைத்திடு நாளும் பெண்குழந்தை ஏதுமின்றி அவளிருந்தாலே அந்தக்குறை தீர்த்துவைக்க வந்த இளம் மானே

ஒரு பொண்ணால் என்பதும் நன்நாள் என்பதும் உன்னால் வந்ததம்மா நல்ல உள்ளம் யாவும் வாழ்த்த வந்தவள் தேவ மங்கையோ ஜீவ கங்கையோ

இங்கு வந்தால் புகுந்த வாசல் விளங்க மகாலட்சுமியே பொன் தாலியோடும் திலகத்தோடும் மாலை சூடியே மஞ்சள் பூசியே

ஆஆஆஹ்ஆஆ அஆஅஆஆஆஆஹ்

வள்ளுவனும் வாசுகியும் வாழ்ந்தது போலே வண்ணமயில் மன்னருடன் வாழவந்தாலே தில்லை தமிழ் பண்புகளை காத்திருப்பாளே தாரம் அவதாரம் என்று பேரேடுபாளே

இங்கு உற்றார் மெச்சவும் ஊரார் மெச்சவும் வந்தால் பொன்மகளே இவள் இங்கே வந்து காலை வைத்ததும் இல்லம் வாழுமே இன்பம் சூழுமே