Varanam Aayiram |
---|
இசை அமைப்பாளர் : இளையராஜா
வாரணம் ஆயிரம்
சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான்
வாரணம் ஆயிரம்
சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான்
என்று எதிர் பூரண பொற்குடம்
வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன்
தோழீ நான்க் கனாக்கண்டேன்
இந்திரன் உள்ளிட்ட
தேவர்-குழாம் எல்லாம்
இந்திரன் உள்ளிட்ட
தேவர்-குழாம் எல்லாம்
வந்திருந்த என்னை
மகட் பேசி மந்திரித்து
இந்திரன் உள்ளிட்ட
தேவர்-குழாம் எல்லாம்
வந்திருந்த என்னை
மகட் பேசி மந்திரித்து
மந்திரக்கோடி உடுத்தி
மணமாலை
மந்திரக்கோடி உடுத்தி
மணமாலை
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன்
தோழீ நான்க் கனாக்கண்டேன்
வாய்நல்லார் நல்ல
மறை ஓதி மந்திரத்தால்
வாய்நல்லார் நல்ல
மறை ஓதி மந்திரத்தால்
பாசிலை நாணல் படுத்துப்
பரிதி வைத்து
பாசிலை நாணல் படுத்துப்
பரிதி வைத்து
காய் சின மா களிறு
அன்னான் என் கைபற்றி
நீ வலஞ் செய்யக் கனாக் கண்டேன்
தோழீ நான்க் கனாக் கண்டேன்