Yaaru Mela

Yaaru Mela Song Lyrics In English


மன்மத அழகில்
மன்மத அழகில்
மான் இவ விழுந்தாளா
பொண் இவ அறிவில்
பொண் இவ அறிவில்
புலிதான் சரிஞ்சானா

மாப்பிள்ள முழியோ
மாப்பிள்ள முழியோ
வெக்கத்தில் விளையாட
பொண் இவ விழியோ
பொண் இவ விழியோ
எதையோ எடை போட

அனுபவமே இல்ல
ஆனாலும் பரவால
தைரியமே இல்ல
முடிஞ்சான்டி இனிமேல
அவன் கொஞ்சம் வழியவும்
இவ கொஞ்சம் நெளியவும்
இரகசியம் வெளி வருமா

யாரு மேல குத்தம் என்ன
ஊரக் கேட்ப்போமா
செஞ்ச தப்ப இன்னொரு டைம்
செஞ்சு பாப்போமா

ஓஓஒ
மது அருந்திய போதை மேல் தப்பா
மதி மயங்கிய கோதை மேல் தப்பா
கண்ணாளா கண்ணாளா பொல்லாத
மாலை மேல் தப்பா

உடல் நடுக்கிய குளிரலை மேல் தப்பா
உடை விரும்பிய விடுதலை மேல் தப்பா
கண்ணாளா கண்ணாளா இல்லாத
ஒழுக்கம் மேல் தப்பா

பாதி தவறு அவன் மேல
மீதி தவறும் அவன் மேல
அவனச் சொல்லி குத்தமில்ல
இவ கொஞ்சம் சிரிச்சதனால

யாரு மேல குத்தம் என்ன
ஊரக் கேட்ப்போமா
செஞ்ச தப்ப இன்னொரு டைம்
செஞ்சு பாப்போமா


முணுமுணுக்குது
இதயம் தன்னால
மணமணக்குது மனசு உன்னால
முன்னால பின்னால இதப்போல்
இவளும் இருந்ததில்ல

நம நமக்குது
உதட்டில் எதனால
கப கபங்குது விரலில் எதனால
முன்னால பின்னால இதப்போல்
அவனும் இருந்ததில்ல

யாரு முதலில் அதக் கேட்டா
யாரு முதலில் சரி சொன்னா
கேட்டது ஒன்னும் குத்தமில்ல
எல்லாமே முடிஞ்சிட்டதால

மன்மத அழகில்
மன்மத அழகில்
மான் இவ விழுந்தாளா
பொண் இவ அறிவில்
பொண் இவ அறிவில்
புலிதான் சரிஞ்சானா

அனுபவமே இல்ல
ஆனாலும் பரவால
தைரியமே இல்ல
முடிஞ்சான்டி இனிமேல
அவன் கொஞ்சம் வழியவும்
இவ கொஞ்சம் நெளியவும்
இரகசியம் வெளி வருமா

யாரு மேல குத்தம் என்ன
ஊரக் கேட்ப்போமா
செஞ்ச தப்ப இன்னொரு டைம்
செஞ்சு பாப்போமா