கவிஞன் கவிஞன் பாரதி பாடல் வரிகள்

Starring Arun Vijay, Shamitha Shreekumar
Movie Pandavar Bhoomi
Music ByRamani Bharadwaj
Lyric By Vairamuthu
SingersChithra
Year 2001

Kaviyan Kaviyan Bharathi Lyric In English

கவிஞன் கவிஞன் பாரதி கேட்டான்
காணி நிலத்தில் ஒரு வீடு
கவிஞன் வழியில் நானும் கேட்டேன்
கவிதை வாழும் சிறு வீடு

சிறு வீடு சிறு வீடு
சிறு வீடு சிறு வீடு

ஒரு பக்கம் நதியில் ஓசை
ஒரு பக்கம் குயிலின் பாஷை
இளம் தென்னையின் கீற்று
ஜன்னலை உரசும் திருவீடு

விரும்புதே மனசு விரும்புதே
விரும்புதே மனசு விரும்புதே

சிறு தென்னங்குயில்கள் பாடி எழுப்பிவிட
தென்றல் வந்து வாசல் தெளித்து விட
கொட்டும் பூக்கள் கோலம்
வரையும்படி விரும்புதே

விரும்புதே மனசு விரும்புதே
விரும்புதே மனசு விரும்புதே

தக தீம்த தீம்த
திர திரனா திரனா திரனா திரனா
திரனா திரனா திரனா திரனா
தக தீம்த தீம்த திரதிர
திர திர திரனா

கனா கண்டு தூங்கும்
வரையில் நிலா வந்து
கதைகள் சொல்ல கண்ணாடி
முற்றம் ஒன்று வேண்டுமே

மின்னல் வந்து
தீண்டும் போது வெட்கம்
வந்து மூடிக்கொள்ள
கண்களாக ஜோடி
ஜன்னல் வேண்டுமே

பறந்தோடும்
பறவை கூட்டம் இரவோடு
தங்கி செல்ல மரகத மாடம்
ஒன்று வேண்டுமே

கொலுசொலியும் கொலுசொலியும்
சிரிப்பொலியும் சிரிப்பொலியும்
எதிரொளித்து எதிரொளித்து இசை வரனும்


இந்த வாசல் வந்தால் கோபம் தீரும்படி
வீசும் காற்றில் ஆயுள்
கூடும்படி பேசும் வார்த்தை
கவிதை ஆகும்படி விரும்புதே

விரும்புதே மனசு விரும்புதே
விரும்புதே மனசு விரும்புதே

கோடைகால மேகம் வந்து
மொட்டை மாடி மேலே நின்று
குடிதண்ணீர் பொழியும்படி வேண்டுமே

வாழ்ந்தவர்கள் கதையை சொல்லி
வருங்கால கனவை எண்ணி
ஊஞ்சலாட திண்ணை ரெண்டு வேண்டுமே

தலைமுறை மாறும்போதும்
பரம்பரை தாங்கும் வண்ணம்
தங்க மணி தூண்கள் ஏழு வேண்டுமே

சிலர் நினைவாய்
பெரும் கனவாய்
அரண்மனையாய்
அதிசயமாய் இது வருமோ

நல்லார் கண்கள் கண்டு போற்றும்படி
பொல்லார் மனசும் நின்று
வாழ்த்தும்படி எல்லா உறவும்
வந்து வாழும்படி விரும்புதே

விரும்புதே மனசு விரும்புதே
விரும்புதே மனசு விரும்புதே சிறு

தென்னங்குயில்கள் பாடி எழுப்பிவிட
தென்றல் வந்து வாசல் தெளித்து விட
கொட்டும் பூக்கள் கோலம்
வரையும்படி விரும்புதே

விரும்புதே மனசு விரும்புதே
விரும்புதே மனசு விரும்புதே

Kavingyan kavingyan bhaarathi kettaan
Kaani nilaththil oru veedu
Kavingyan vazhiyil naanum ketten
Kavidhai vaazhum siruveedu

Siruveedu siruveedu
Siruveedu siruveedu

Oru pakkam nadhiyil osai
Oru pakkam kuyilin bhaashai
Ilam thennayin keetru
Jennalai urasum thiruveedu

Virumbudhae manasu virumbudhae
Virumbudhae manasu virumbudhae

Siru thennanguyilgal paadi ezhuppivida
Thendral vandhu vaasal theliththuvida
Kottum pookkal kolam varaiyumpadi virumbudhae
Virumbudhae manasu virumbudhae
Virumbudhae manasu virumbudhae

Thakka theemtha theemtha
Thirathirana thirathirana thirathirana thirathirana
Thirathirana thirathirana thirathirana thirathirana
Thakka theemtha theemtha
Thirathira thira thira thiranaa

Kanaakkandu thoongum varayil
Nilaa vandhu kadhaigal solla
Kannaadi muttram ondru vendumae

Minnal vandhu theendumbodhu
Vetkkam vandhu moodikkolla
Kangalaaga jodi jannal vendumae

Parandhodum paravai koottam
Iravodu thangichella
Maragadha maadam ondru vendumae

Kolusoliyum kolusoliyum
Sirippoliyum sirippoliyum
Yedhiroliththu yedhiroliththu
Isai varanum


Indha vaasal vandhaal
Kobam theerumpadi
Veesum kaatril aayul koodumpadi
Pesum vaarththai kavidhai aagumpadi virumbudhae

Virumbudhae manasu virumbudhae
Virumbudhae manasu virumbudhae

Kodaikaala megam vandhu
Mottaimaadi melae nindru
Kudithanneer pozhiyumbadi vendumae

Vaazhndhavargal kadhayaicholli
Varungaala kanavai enni
Oonjalaada thinnai rendu vendumae

Thalaimurai maarumpodhum
Parambarai thaangum vannam
Thanga mani thoongal
Ezhu vendumae

Silar ninaivaai
Perum kanavaai
Aranmanayaai adhisayamaai
Idhu varumo

Nallaar kangal kandu potrumpadi
Pollaar manasum nindru vaazhthumpadi
Yellaa uravum vandhu vaazhumpadi virumbudhae

Virumbudhae manasu virumbudhae
Virumbudhae manasu virumbudhae

Siru thennanguyilgal paadi ezhuppivida
Thendral vandhu vaasal theliththuvida
Kottum pookkal kolam varaiyumpadi virumbudhae

Virumbudhae manasu virumbudhae
Virumbudhae manasu virumbudhae

Kaviyan Kaviyan Bharathi Song Lyrics from movie Pandavar Bhoomi. Kaviyan Kaviyan Bharathi song sung by Chithra. Kaviyan Kaviyan Bharathi Song Composed by Ramani Bharadwaj. Kaviyan Kaviyan Bharathi Song Lyrics was Penned by Vairamuthu. Pandavar Bhoomi movie cast Arun Vijay, Shamitha Shreekumar in the lead role actor and actress. Pandavar Bhoomi movie released on 2001

Kaviyan Kaviyan Bharathi Song Lyrics From Pandavar Bhoomi | கவிஞன் கவிஞன் பாரதி பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies