Aadhi Bhavan Thiruvadi

Aadhi Bhavan Thiruvadi Song Lyrics In English


ஆதி பகவன் திருவடி வாழ்க ஆதி பகவன் திருவடி வாழ்க அன்னை சக்தி மலரடி வாழ்க வேதம் வாழ்க வேதியர் வாழ்க விளங்கும் புவனம் யாவையும் வாழ்க ஆதி பகவன் திருவடி வாழ்க ஆஅஆஅஆ

கண்ணொளி வழங்கும் கதிரவன் வாழ்க காலங்களாலே முதியவன் வாழ்க பொன்னொளி தந்தாய் பூமியில் எங்கும் போற்றுகின்றேன் நான் வணங்குகின்றேனே ஆஆஅ

தண்ணொளி வழங்கும் சந்திர தேவா சாயும் பொழுதில் உலவும் தலைவா பெண் முகம் என்றே ஆஅ பெண் முகம் என்றே பேசும் பொருளே பெரியவனே உனை வணங்குகின்றேனே

பூமித்தாய் பெற்றெடுத்த பொன்மகன் நீயே புகழ் பெறும் செவ்வாய் கிரகமும் நீயே பாவையர் ஜாதகம் படைப்பவன் நீயே ஆபாவையர் ஜாதகம் படைப்பவன் நீயே பணிவுடன் உனை வணங்குகின்றேனே

சந்திரன் தாரை தாய் தந்தையாக வந்தாய் புதன் எனும் மன்னனாக இயங்கும் தொழில்களின் அதிபதி நீயே இளையவன் நா உனை வணங்குகின்றேனே


இரு மனம் சேர்ந்து ஒரு முகமாக திருமண நேரம் குறிப்பவன் நீயே வியாழன் என்னும் பேர் கொண்டாயே வியாழன் என்னும் பேர் கொண்டாயே மேலவனே உனை வணங்குகின்றேனே

தொட்டவை எல்லாம் பொன்னாய் மலரும் சுக்கிரனே உன் பார்வை பட்டாலே உள்ளங்கள் தேடி உதவி செய்வாயே உயர்ந்தவனே உனை வணங்குகின்றேனே

கொங்கு சனியென்றும் மங்கு சனியென்றும் வடிவம் பலவாக நின்றாய் கொங்கு சனியென்றும் மங்கு சனியென்றும் வடிவம் பலவாக நின்றாய் தங்கும் இடம் கண்டு சொந்த மடம் கண்டு நன்மை பல கோடி செய்வாய் சனீஸ்வரா! உன்னை வணங்குகின்றேனே

மனிதர்கள் தினம் பார்க்கும் காலங்கள் பலவுண்டு மயக்கம் தரும் ராகு கேது ஓருடல் உயிராக உலவிடும் கிரகங்கள் உங்களை வணங்குகின்றேனே!