Aadum Azhage Azhagu

Aadum Azhage Azhagu Song Lyrics In English


இருவர் : ஆடும் அழகே அழகு
அசைந்து ஆடும் அழகே அழகு
சொந்த நாடும் கலைகள்
பண்பாடும் உயர
நடமாடும் அழகே அழகு
சொந்த நாடும் கலைகள்
பண்பாடும் உயர
நடமாடும் அழகே அழகு

ஓடும் நதியின்
அலை ஒயில் போலவே
ஓடும் நதியின்
அலை ஒயில் போலவே

குயில் பாடும் இசைக்குப்
பொருள் தெரிந்து
தோகை மயில் ஆடும் அழகே அழகு

இருவர் : குயில் பாடும் இசைக்குப்
பொருள் தெரிந்து
தோகை மயில் ஆடும் அழகே அழகு

ஊதும் மகுடி தரும்
ஓசைதனைக் கேட்டு
ஒய்யாரமாய் நாகப்பாம்பாடுமே
ஊதும் மகுடி தரும்
ஓசைதனைக் கேட்டு
ஒய்யாரமாய் நாகப்பாம்பாடுமே

மோதும் வசந்தத்
தென்றல் மோகம் தெரிந்து
முத்து முல்லை நகை புரிந்து
உறவாடுமே

மோதும் வசந்தத்
தென்றல் மோகம் தெரிந்து
முத்து முல்லை நகை புரிந்து
உறவாடுமே

இருவர் : பாதம் பதிந்து
தண்டை ஒலி செய்யவே
பாதம் பதிந்து
தண்டை ஒலி செய்யவே

நவபாவம் ராகம் ம்ம்ம் ம்ம் ம்ம்

ராகம் ம்ம்ம் ம்ம் ம்ம்

தாளம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்

இருவர் : நவபாவம் ராகம் தாளம்
ஒருங்கே அமைந்து
பரதம் ஆடும் அழகே அழகு


பங்கயம் போல் குவிந்த
விரல்களை நீட்டி
செங்கதிரை திங்களை அபிநயம் கூட்டி

இருவர் : பங்கயம் போல் குவிந்த
விரல்களை நீட்டி
செங்கதிரை திங்களை அபிநயம் கூட்டி

மங்கள ஆடை அணிகளைப் பூட்டி





மங்கள ஆடை அணிகளைப் பூட்டி
கண்கவர் நடனக் கலைத்திறன் காட்டி

செந்தமிழ்க் காவியத்தை மனம் நாட

சுந்தரத் தாய்மொழியின் புகழ் பாட

இருவர் : செந்தமிழ்க் காவியத்தை மனம் நாட
சுந்தரத் தாய்மொழியின் புகழ் பாட

கொஞ்சிடும் வீணையில் விரலாட
கொஞ்சிடும் வீணையில் விரலாட

உள்ள சஞ்சலம் யாவும் பறந்தோட

இருவர் : உள்ள சஞ்சலம் யாவும் பறந்தோட
மகிழ்ந்து
ஆடும் அழகே அழகு
சொந்த நாடும் கலைகள் பண்பாடும் உயர
நடமாடும் அழகே அழகு