Aalamarathu Kuyile |
---|
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆல மரத்துக் குயிலே குயிலே
தொண ஒனக்கு இருக்கா இருக்கா
ஆல மரத்துக் குயிலே குயிலே
தொண ஒனக்கு இருக்கா இருக்கா
எச படிக்கும் குயிலே குயிலே
எண ஒனக்கு இருக்கா இருக்கா
நீ சொல்லு ஒரு சேதி
எங்கே இருக்கு ஓன் ஜோடி
வைக்கட்டா வைக்கட்டா
வெத்தலப் பாக்கு
ஒரு வெத்தலப் பாக்கு
கட்டட்டா கட்டட்டா
கல்யாணப் பாட்டு
நல்ல கல்யாணப் பாட்டு
ஆல மரத்துக் குயிலே குயிலே
தொண ஒனக்கு இருக்கா இருக்கா
எச படிக்கும் குயிலே குயிலே
எண ஒனக்கு இருக்கா இருக்கா
பவளக் கல்லு மணி இருக்கும்
பள பளன்னு ஒளி இருக்கும்
பாவை இவள் பாக்கும் விழி ஓரம்
வைரக் கல்லு வரிசருக்கும்
வளச்சிழுக்கும் வனப்பிருக்கும்
வஞ்சி இவள் சிரிக்கும் இதழோரம்
சிலு சிலு காத்து அடிக்கிதா
சித்திரத் தேரு ஓடுதா
சிறுமணி சிரிச்சு குலுங்குதா
சிறு குடம் லேசா தளும்புதா
முத்துச் சரம் போட முத்தளந்து போடு
சித்திரையில் வந்த நிலா
ஹே நீ தானே
ஆல மரத்துக் குயிலே குயிலே
தொண ஒனக்கு இருக்கா இருக்கா
எச படிக்கும் குயிலே குயிலே
எண ஒனக்கு இருக்கா இருக்கா
காப்புக் கட்டி கரகம் கட்டி
காத்திருந்தேன் கோவிலிலே
காக்க வெச்ச சாமி நீ தானா
திரி எடுத்து நெய் எடுத்து
வெளக்கு வெச்சு காத்திருந்தேன்
வெளிச்சம் தந்த சாமி நீ தானா
கலகல மணி தான் அடிக்குதா
காத்துல கலக்க துடிக்குதா
சிறு சிறு சூடம் எரியுதா
எரியிற வேகம் புரியுதா
கோவிலுக்கு முன்னே
கோலங்கள போடு
கோலக் கிளி கூட்டோடு
ஹே கூத்தாடு
ஆல மரத்துக் குயிலே குயிலே
தொண ஒனக்கு இருக்கா இருக்கா
எச படிக்கும் குயிலே குயிலே
எண ஒனக்கு இருக்கா இருக்கா
நீ சொல்லு ஒரு சேதி
எங்கே இருக்கு ஓன் ஜோடி
வைக்கட்டா வைக்கட்டா
வெத்தலப் பாக்கு
ஒரு வெத்தலப் பாக்கு
கட்டட்டா கட்டட்டா
கல்யாணப் பாட்டு
நல்ல கல்யாணப் பாட்டு
ஆல மரத்துக் குயிலே குயிலே
தொண ஒனக்கு இருக்கா இருக்கா
எச படிக்கும் குயிலே குயிலே
எண ஒனக்கு இருக்கா இருக்கா