Aandipatti Mariappan

Aandipatti Mariappan Song Lyrics In English


வசனம் :

ஆண்டிப்பட்டி மாரியப்பன் பெண்டாட்டி நான் பெண்டாட்டி அட இதுக்கு மேலே என்னத்தை சொல்ல அண்ணாச்சி

வசனம் :

நா ஆசையோடதான் வாக்கப்பட்டேனே ஆறு மாசம் ஆனா பின்னே ஏய்ச்சு புட்டானே

வசனம் :

குருத்து வாழை கண்ணு போல குருவம்மா நான் இருக்க கூறு கேட்ட அத்தை மகன் வேறோருத்தியோடு சகவாசம் ஹூம் ஹூம்ம்ம்ம்

மிளகாய் பழம் போல முத்ததிலே வந்து நிக்கேன் மூதேவி அத்தை மகன் முண்டச்சி சகவாசம் ஹூம் ஹூம்ம்ம்ம்

வசனம் :

ஆண்டிப்பட்டி மாரியப்பன் பெண்டாட்டி நான் பெண்டாட்டி அட இதுக்கு மேலே என்னத்தை சொல்ல அண்ணாச்சி

வசனம் :

பதினெட்டு பணியாரம் மதிலெட்டி கொடுத்தாலும் இரவலெடி என் புருஷன் உனக்கு இரவெலடி என் புருஷன் என் புருஷன் என் புருஷன் எனக்குதான் சொந்தமடி

வசனம் :


அத்தாப்பு வீடு கட்டி அண்ணாச்சி அதில அழகாக ரெண்டு ஜன்னல் வைச்சாச்சு எட்டி எட்டி பார்த்தாலும் எட்டாம போச்சு ஒட்டி ஒட்டி பார்த்தாலும் ஒட்டாம போச்சு

வசனம் :

செட்டிக்கடை வெட்டிவேறு சிவகாசி பன்னீரு மருதக்கடை சக்களத்தி மறக்க பொடி போட்டாளே குருத வாழை கருது போல குடும்ப பொண்ணு நான் இருக்க வெள்ளி மூக்கு அழகுக்காக வேற வழி போகலாமா ஹூம் ஹூம்ம்ம்ம்

வசனம் :

பூசணிகீரை தாரேன் புத்தி கேட்ட சக்களத்தி சாரணத்து கீரை தாரேன் சாமியைத்தான் விட்றடி

வசனம் :

காலு ரெண்டும் ஒட்டக்காலு அண்ணாச்சி என் அண்ணாச்சி கண்ணு ரெண்டும் நொள்ளை கண்ணு அண்ணாச்சி

நொள்ளை கண்ணு சக்களத்தி அண்ணாச்சி அட போட்டுப்புட்டா சொக்குப்பொடி அண்ணாச்சி என்ன செய்வேன் அழாதே ஏது செய்வேன் நான் இருக்க கூட ஒரு இடமே இல்லை

வசனம் :

ஆண்டிப்பட்டி மாரியப்பன் பெண்டாட்டி நான் பெண்டாட்டி அட இதுக்கு மேலே என்னத்தை சொல்ல அண்ணாச்சி