Aararo Aariraro

Aararo Aariraro Song Lyrics In English


இசை அமைப்பாளர் : எல் வைத்தியநாதன்

ம்ஹும் ஹும்ம் ம்ஹும் ஹும்ம்
ம்ஹும் ஹும்ம் ம்ஹும் ஹும்ம்

ம்ஹும் ஹும்ம் ம்ஹும் ஹும்ம்
ம்ஹும் ஹும்ம் ம்ஹும் ஹும்ம்

ஆராரோ ஆரிராரோ
கனாவே வளர்பிறை நிலாவே
தங்கமே பாடிடுவேன்
உனக்கு ஆரிராராரோ
தூங்கிடு தோள்மீது
அழகே ஆரிராராரோ

ஆராரோ ஆரிராரோ
கனாவே வளர்பிறை நிலாவே
தங்கமே பாடிடுவேன்
உனக்கு ஆரிராராரோ
தூங்கிடு தோள்மீது
அழகே ஆரிராராரோ

நாளை ஒரு காலம் வரும்
நல்லவர்க்கு வாழ்வு வரும்
நலங்கள் எல்லாம் நமக்காக

கையிரண்டில் தெம்பு உண்டு
கண்ணிரண்டில் அன்பு உண்டு
கருணைப் புரிவாய் உயிர் வாழ

பொறுமையிருந்தால் பூமியை வெல்வாய்
நம்பிக்கை மீது நம்பிக்கை கொள்வாய்
வானும் மண்ணும் வாழ்த்துமடா வா


ஆராரோ ஆரிராரோ
கனாவே வளர்பிறை நிலாவே
தங்கமே பாடிடுவேன்
உனக்கு ஆரிராராரோ
தூங்கிடு தோள்மீது
அழகே ஆரிராராரோ

உந்தன் மடி சாய்ந்திருந்து
நான் அருந்தும் தேன் விருந்து
அதுதான் வாழ்வில் பேரின்பம்

பேரழகு பூத்திருக்கும்
பெண்ணழகு பார்த்திருந்தால்
அடடா அதுதான் ஆனந்தம்

மனைவியின் கண்கள் மங்கல தீபம்
வாழ்ந்திட வேண்டும் ஆயிரம் காலம்
வாழ்க்கையெல்லாம் சேர்ந்திருப்போம் வா

ஆராரோ ஆரிராரோ
கனாவே வளர்பிறை நிலாவே
தங்கமே பாடிடுவேன்
உனக்கு ஆரிராராரோ
தூங்கிடு தோள்மீது
அழகே ஆரிராராரோ

ம் ஹும் ஹும் ம் ம் ஹும் ஹும் ம்
ஆராரோ ஆரிராரிராரோ
ம் ஹும் ஹும் ம் ஆரிராராரோ
ம் ஹும் ஹும் ம் ம் ஹும் ஹும் ம்