Aasaiyilae Pathi Katti Sad |
---|
ஆசையில பாத்தி கட்டி
நாத்து ஒண்ணு
நட்டு வைக்க வா பூவாயி
ஆசையில பாத்தி கட்டி
நாத்து ஒண்ணு
நட்டு வைக்க வா பூவாயி
ஆதரவ தேடி ஒரு பாட்டு
ஒண்ணு கட்டி வச்சேன்
வா என் தாயி
நானா பாடலையே
நீ தான் பாட வச்ச
நானா பாடலையே
நீ தான் பாட வச்ச
ஆசையில பாத்தி கட்டி
நாத்து ஒண்ணு
நட்டு வைக்க வா பூவாயி
கண்ணுதான் தூங்கவில்லை
காரணம் தோணவில்லை
பொண்ணு நீ ஜாதி முல்லை
பூமாலை ஆகவில்லை
கன்னி நீ நாத்து
கண்ணன் நான் காத்து
வந்து தான் கூடவில்லை
கூரப்பட்டு சேலை
நான் வாங்கி வரும் வேளை
போடு ஒரு மாலை
நீ சொல்லு அந்த நாளை
உனக்காக நான் காத்திருக்க
பதில் கூறு பூவாயி
ஆசையில பாத்தி கட்டி
நாத்து ஒண்ணு
நட்டு வைக்க வா பூவாயி
ஆதரவ தேடி ஒரு பாட்டு
ஒண்ணு கட்டி வச்சேன்
வா என் தாயி
சொந்தமா பாடுங்கிளி
சோகமா போனதய்யா
உள்ளம் தான்
நொந்து நொந்து ஊமையா ஆனதய்யா
கண்ணுல நீரு காரணம் யாரு
கன்னி நான் கூறவா
ஒத்தமரம் போல
நான் நிக்கும் இந்த வேளை
என்ன சொல்லி பாட என்
துன்பம் எல்லை மீற
தொடராது இது இனி மேலே
தொனை நான் தான் பூவாயி
ஆசையில பாத்தி கட்டி
நாத்து ஒண்ணு
நட்டு வச்சேன் நான் பூவாயி
ஆதரவ தேடி ஒரு பாட்டு
ஒண்ணு கட்டி வச்சேன்
நான் பூவாயி
நானா பாடலையே
நீ தான் பாட வச்ச
நானா பாடலையே
நீ தான் பாட வச்ச
ஆசையில பாத்தி கட்டி
நாத்து ஒண்ணு
நட்டு வச்சேன் நான் பூவாயி