Aathadi Aathadi

Aathadi Aathadi Song Lyrics In English


ஆத்தாடி ஆத்தாடி
செம்பருத்தி பூக்காாி
ஆசைப்பட்டு பூத்திருக்கா வா
உன் ராசாத்தி ராசாத்தி
ரங்கூனுக்கு ராசாத்தி
ராப்பகலா காத்‌திருக்கா வா

இது முதல் முதலாய்
சிலு சிலுப்பு முதுகு தண்டில்
குறுகுறுப்பு முழு விவரம்
எனக்கு சொல்வாயா
என் அடி மனசில் சுகம் இருக்கு
அடி வயிற்றில் பயம் இருக்கு
அதுக்கு மட்டும் மருந்து சொல்வாயா

ஆத்தாடி

ஆத்தாடி ஆத்தாடி
செம்பருத்தி பூக்காாி
ஆசைப்பட்டு பூத்திருக்கா வா
உன் ராசாத்தி ராசாத்தி
ரங்கூனுக்கு ராசாத்தி
ராப்பகலா காத்‌திருக்கா வா

நீ மகுடத்தில் வைர கல்லு
நானோ மழ பெஞ்சா உப்பு கல்லு
உன்ன தொடவும் விரல் படவும்
ஒரு பொருத்தம் எனக்கேது

நான் தரமான தங்கக்கட்டி
நீ தகரத்தில் கெட்டிப்பெட்டி
என்னை அடைக்க காத்து கெடக்கு
உன்ன போல ஆளு ஏது

ஆசைகள் இருந்தா கூட
மனம் மசியாதுஆத்துல
விழுந்தா கூட
நிழல் நனையாது

உள்ளுக்குள் உள்ள
கிறுக்கு உன்ன சும்மா விடாது


ஆத்தாடி ஆத்தாடி
செம்பருத்தி பூக்காாி
ஆசைப்பட்டு பூத்திருக்காலா
உன் ராசாத்தி ராசாத்தி
ரங்கூனுக்கு ராசாத்தி
ராப்பகலா காத்‌திருக்காலா

கடிகார முள்ளப் போல
என்ன கணம் தோறும் சுத்தி வாயா
என்ன தொறத்து தூள்பறத்து
இந்த அல்லிப் பூ கிள்ளி போயா

புளி மூட்ட தூக்கி பாா்த்தேன்
இப்ப பூ மூட்ட தூக்க போறேன்
இளஞ்சிாிக்கி உன்ன முறுக்கி
என் அருணாக்கயிறு ஆக்க போறேன்

இடுப்புல கயிறா கெடக்க
மனம் தயங்குதையா
கழுத்துல கயிறா வந்தா
நித்தமும் சொந்தம் அய்யா

விழியால் தொட்ட
அழகே இந்த ஆச மாறாதே

ஆத்தாடி ஆத்தாடி
செம்பருத்தி பூக்காாி
ஆசைப்பட்டு பூத்திருக்கா வா
உன் ராசாத்தி ராசாத்தி
ரங்கூனுக்கு ராசாத்தி
ராப்பகலா காத்‌திருக்கா வா

இது முதல் முதலாய்
சிலு சிலுப்பு முதுகு தண்டில்
குறுகுறுப்பு முழு விவரம்
எனக்கு சொல்வாயா
என் அடி மனசில் சுகம் இருக்கு
அடி வயிற்றில் பயம் இருக்கு
அதுக்கு மட்டும் மருந்து சொல்வாயா