Aathi Aathi

Aathi Aathi Song Lyrics In English


ஆத்தி ஆத்தி ராசாத்தியே
எங்கே போறே ஏமாத்தியே
மதுரை வீரன் கண்ணி இது
வைகை ஆத்து தண்ணி இது

பருப்பு இங்கே வேகாதடி
பசப்பு வேலை ஆகாதடி
உதட்டை ஏன் அடிக்கடி கடிக்கிறே
மொகத்திலே முள்ளையேன் வெதைக்கிறே

ஆத்தி ஆத்தி
ஆத்தி ஆத்தி ராசாத்தியே
எங்கே போறே ஏமாத்தியே
மதுரை வீரன் கண்ணி இது
வைகை ஆத்து தண்ணி இது

நம்மூரு தென்மருத என் செல்லக்குட்டி
நீதான்டி நாட்டிய குருத
ஹேய் துள்ளாத வா அருகே நீ சம்மதிச்சா
தோளோடு மாலையை தருவேன்

ஏய் சின்ன சம்பா நாத்து
உன் சேட்டையெல்லாம் மாத்து
காமதேவன் கூத்து
நான் காட்டப் போறேன் பாத்து
அடி சுந்தரி கொடி முந்திரி
இது என்னடி வெட்கம்

ஆத்தி ஆத்தி
ஆத்தி ஆத்தி ராசாத்தியே
எங்கே போறே ஏமாத்தியே
மதுரை வீரன் கண்ணி இது
வைகை ஆத்து தண்ணி இது

ஹே ஹா அஹா
கண்ணாட்டி கைப் புடிச்சே பூப்பந்திட
கண்ணால நாளு இப்ப குறிப்பேன்
பாவாட பூப்பறிப்பேன் என் நெஞ்சினிக்க
பன்னீரை நான் அள்ளித் தெளிப்பேன்

மேற்கு மாசி வீதி வீதியெங்கும் ஜோதி
தாலிக் கட்டும் தேதி
சொல்லப் போறேன் சேதி
நவராத்திரி பல ராத்திரி சிவராத்திரி யம்மோய்


ஆத்தி ஆத்தி
ஆத்தி ஆத்தி ராசாத்தியே
எங்கே போறே ஏமாத்தியே
மதுரை வீரன் கண்ணி இது
வைகை ஆத்து தண்ணி இது

ஆளான பெண்மயிலே என் கிட்ட வந்து
ஆடேன்டி நீ கொஞ்சம் ஒயிலே
தஞ்சாவூர் நெல் வயலே
உன் நெஞ்சிலிட்டு தாலாட்டு பாடேன்டி குயிலே

ஓரக்கண்ணில் பாத்தா
நான் ஒத்துக்கிட்டேன் ஆத்தா
நெஞ்சில் என்னை சேத்தா
என் தாகமெல்லாம் தீர்த்தா
சூடேறுது சுருதி ஏறுது தடுமாறுது வாடி

ஆத்தி ஆத்தி
ஆத்தி ஆத்தி ராசாத்தியே
எங்கே போறே ஏமாத்தியே
மதுரை வீரன் கண்ணி இது
வைகை ஆத்து தண்ணி இது

பருப்பு இங்கே வேகாதடி
பசப்பு வேலை ஆகாதடி
உதட்டை ஏன் அடிக்கடி கடிக்கிறே
மொகத்திலே முள்ளையேன் வெதைக்கிறே