Aathu Vellam

Aathu Vellam Song Lyrics In English


ஓஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓ
ஹோ ஓ ஓ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஒ ஓ ஹோய்

ஆத்து வெள்ளம் காத்திருக்கு
அழுக்குத் துணியும் நெறஞ்சிருக்கு
போட்டு கசக்கி எடுத்து விட்டா வெள்ளையப்பா

ஆண் ஆஹா ஹா ஓஹோ ஹோ ஓஹோ

ஆத்து வெள்ளம் காத்திருக்கு
அழுக்குத் துணியும் நெறஞ்சிருக்கு
போட்டு கசக்கி எடுத்து விட்டா வெள்ளையப்பா
நல்லா புழிஞ்சி கரையில்
காய வெச்சா வெள்ளையப்பா

ஆண் ஆத்து வெள்ளம் காத்திருக்கு
அழுக்குத் துணியும் நெறஞ்சிருக்கு
போட்டு கசக்கி எடுத்து விட்டா வெள்ளையப்பா
நல்லா புழிஞ்சி கரையில்
காய வெச்சா வெள்ளையப்பா

மனசு போல வெளுத்து வெச்சி
ஓறவு போல அடுக்கி வெச்சி
வரவு போல மூட்ட கட்டி வெள்ளையப்பா
நாம வரவு வைக்கும்
நாணயம்தான் வெள்ளையப்பா

ஆண் ஆமா போ
மனசு போல வெளுத்து வெச்சி
ஓறவு போல அடுக்கி வெச்சி
வரவு போல மூட்ட கட்டி வெள்ளையப்பா
நாம வரவு வைக்கும்
நாணயம்தான் வெள்ளையப்பா

அப்பப்பா

ஆத்து வெள்ளம் காத்திருக்கு
அழுக்குத் துணியும் நெறஞ்சிருக்கு
போட்டு கசக்கி எடுத்து விட்டா வெள்ளையப்பா
நல்லா புழிஞ்சி கரையில்
காய வெச்சா வெள்ளையப்பா

கலையத்திலே கஞ்சி வச்சி
காட்டு கீர வதக்கி வச்சி மதியத்திலே
கொண்டு செல்வோம் வெள்ளையம்மா

பெண் ஆஹா ஓஹோ

கலையத்திலே கஞ்சி வச்சி
காட்டு கீர வதக்கி வச்சி மதியத்திலே
கொண்டு செல்வோம் வெள்ளையம்மா
நம்ம மனசுக்குள்ளே
களங்கம் இல்லே வெள்ளையம்மா
நம்ம மனசுக்குள்ளே
களங்கம் இல்லே வெள்ளையம்மா

பெண் கலையத்திலே கஞ்சி வச்சி
காட்டு கீர வதக்கி வச்சி மதியத்திலே
கொண்டு செல்வோம் வெள்ளையம்மா
நம்ம மனசுக்குள்ளே
களங்கம் இல்லே வெள்ளையம்மா
நம்ம மனசுக்குள்ளே
களங்கம் இல்லே வெள்ளையம்மா

ஆடி ஓடி வேல செஞ்சி
அலுத்து வந்து படுத்தவரை
பாடிப் பாடி தூங்க வைப்போம்
வெள்ளையம்மா

பெண் ஓஹோ ஆஹா

ஆடி ஓடி வேல செஞ்சி
அலுத்து வந்து படுத்தவரை
பாடிப் பாடி தூங்க வைப்போம்
வெள்ளையம்மா
நம்ம பரம்பரைக்கே
களங்கமில்லே வெள்ளையம்மா

பெண் நம்ம பரம்பரைக்கே
களங்கமில்லே வெள்ளையம்மா

ஆண் ஆம்மம்மா
ஆத்து வெள்ளம் காத்திருக்கு

பெண் அழுக்குத் துணியும் நெறஞ்சிருக்கு

ஆண் போட்டு கசக்கி எடுத்து விட்டா
வெள்ளையப்பா

பெண் நல்லா புழிஞ்சி கரையில்
காய வெச்சா வெள்ளையப்பா

கல்யாண பொடவையின்னு
மாமனாரு கொடுத்த சேலை
கொடுக்கையிலே இருந்த நிறம் பச்சையப்பா
போட்டு தொவக்கையிலே வந்த நிறம்
வெள்ளையப்பா அப்பா

கல்யாண பொடவையின்னு
மாமனாரு கொடுத்த சேலை
கொடுக்கையிலே இருந்த நிறம் பச்சையப்பா
போட்டு தொவக்கையிலே வந்த நிறம்
வெள்ளையப்பா அப்பா

வேட்டி சேலை போட்டி போட்டு
ஆத்துக்குள்ளே அலசும் போது
வேட்டி இங்கே ஜெயிக்குதடா வெள்ளையப்பா ஓ

ஆண் ஆஹா ஓஹோ


வேட்டி சேலை போட்டி போட்டு
ஆத்துக்குள்ளே அலசும் போது
வேட்டி இங்கே ஜெயிக்குதடா வெள்ளையப்பா

ஆனா வீட்டுக்குள்ளே
சேல தானே வெல்லுதப்பா

பெண் வீட்டுக்குள்ளே சேல தானே
வெல்லுதப்பா

பட்டுச் சேலை நூலு சேலை
பள பளக்கும் ஜருகச் சேலை
கட்டம் போட்ட சாயச் சேலை
கொட்டடிச் சேலை
நல்ல கல்யாணக் கூரச் சேலை
சுங்கடிச் சேலை
தொவச்சி மூட்ட கட்டி சேர்த்து விட்டா
தீர்ந்தது வேலை

பெண் ஆம்மம்மா
ஆத்து வெள்ளம் காத்திருக்கு

ஆண் அழுக்குத் துணியும் நெறஞ்சிருக்கு

பெண் போட்டு கசக்கி எடுத்து விட்டா
வெள்ளையப்பா

ஆண் நல்லா புழிஞ்சி கரையில்
காய வெச்சா வெள்ளையப்பா

வானவில்லைப் போலே
ஆஆஅஆஆஆஆஆஆஓஒஓஒ
ஹ்ம்ம் ஓ ஓ ஹோ ஹோ ஓஒ
வானவில்லைப் போலே இங்கு
வண்ண வண்ணச் சேலை எல்லாம்
பூமியிலே காயுதடி வெள்ளையம்மா

வானவில்லைப் போலே இங்கு
வண்ண வண்ணச் சேலை எல்லாம்
பூமியிலே காயுதடி வெள்ளையம்மா
எங்க புத்தியிலே உள்ள நிறம் வெள்ளையம்மா

பெண் எங்க புத்தியிலே உள்ள நிறம்
வெள்ளையம்மா

கந்தையிலே அழுக்கிருந்தால்
கசக்கி எடுத்து விடு வெள்ளையப்பா
உன் சிந்தையிலே அழுக்கிருந்தால்
சிவனடியை நாடி விடு வெள்ளையப்பா

உயிரே அழுக்குத் துணி
உவர் மண்ணே நம் பிறப்பு
உயிரே அழுக்குத் துணி
உவர் மண்ணே நம் பிறப்பு
பூ உலக வாழ்க்கை எனும்
பொல்லாத கல்லினிலே
பூ உலக வாழ்க்கை எனும்
பொல்லாத கல்லினிலே

மோதி அடிக்கையிலே முற்றும் கசக்கையிலே
மோதி அடிக்கையிலே முற்றும் கசக்கையிலே
ஆதி சிவன் என்னும் ஆற்றில் வரும் வெள்ளத்திலே
ஆதி சிவன் என்னும் ஆற்றில் வரும் வெள்ளத்திலே
அழுக்கெல்லாம் வெளுக்குதடா வெள்ளையப்பா
அவன் அருள் என்னும் நிழல் தனிலே வெள்ளையப்பா
இந்த உயிரெல்லாம் வாழுதடா வெள்ளையப்பா

உயிரே அழுக்குத் துணி
உவர் மண்ணே நம் பிறப்பு
பூ உலக வாழ்கை எனும்
பொல்லாத கல்லினிலே

மோதி அடிக்கையிலே முற்றும் கசக்கையிலே
ஆதி சிவன் என்னும் ஆற்றில் வரும் வெள்ளத்திலே
ஆதி சிவன் என்னும் ஆற்றில் வரும் வெள்ளத்திலே
அழுக்கெல்லாம் வெளுக்குதடா வெள்ளையப்பா
அவன் அருள் என்னும் நிழல் தனிலே வெள்ளையப்பா
இந்த உயிரெல்லாம் வாழுதடா வெள்ளையப்பா

பஞ்சிலே நூலை வைத்தான்
நூலிலே ஆடை வைத்தான்
ஆடையிலே மானம் வைத்தான் அந்த
மானத்திலே உயிரை வைத்தான் வெள்ளையப்பா

பக்தருக்கு அருள் குறிப்பு
பாமரர்க்கு பொருள் குறிப்பு
பக்தருக்கு அருள் குறிப்பு
பாமரர்க்கு பொருள் குறிப்பு
சத்தியத்தின் ஒரு குறிப்பு வெள்ளையப்பா
அது முக்தி தரும் திருக் குறிப்பு வெள்ளையப்பா
சத்தியத்தின் ஒரு குறிப்பு வெள்ளையப்பா
அது முக்தி தரும் திருக் குறிப்பு வெள்ளையப்பா

ஆண் ஆத்து வெள்ளம் காத்திருக்கு

பெண் அழுக்குத் துணியும் நெறஞ்சிருக்கு

ஆண் போட்டு கசக்கி எடுத்து விட்டா
வெள்ளையப்பா

பெண் நல்லா புழிஞ்சி கரையில்
காய வெச்சா வெள்ளையப்பா

ஆத்து வெள்ளம் காத்திருக்கு
அழுக்குத் துணியும் நெறஞ்சிருக்கு
போட்டு கசக்கி எடுத்து விட்டா வெள்ளையப்பா
நல்லா புழிஞ்சி கரையில்
காய வெச்சா வெள்ளையப்பா