Aatti Vechaa |
---|
மாலை இட்ட பாவத்துக்கு
வேலை செய்ய
நான் இருக்கேன் பத்தினியே
காலடியில் காப்பியுடன் காத்திருக்கேன்
கண் திறவாய் உத்தமியேஏ
ஆஹா ஆஹா ஹான்ஹே
ஏஆஹா ஆஹா ஹான்ஹே
ஆட்டி வெச்சா
ஆட வேணும் நாதா
நான் மாட்டிக்கிட்டு
முழிக்கிறேனே சீதா
ஆட்டி வெச்சா
ஆட வேணும் நாதா
நான் மாட்டிக்கிட்டு
முழிக்கிறேனே சீதா
கேட்டா கேட்டத
வாங்கி குடுக்கிறேன்
சொன்னாச் சொன்னத
செஞ்சு முடிக்கிறேன்
ராவா பகலா
ராஜாத்தி எண்ணப்படி
ஆட்டி வெச்சா
ஆட வேணும் நாதா
நான் மாட்டிக்கிட்டு
முழிக்கிறேனே சீதா
நாள் தோறும் பாய் விரிக்க
படுத்தா கால் அமுக்க
ஆள் வேணும் அதுக்காக
ஒன்னப் புடிச்சேன்
நாள் தோறும் பாய் விரிக்க
படுத்தா கால் அமுக்க
ஆள் வேணும் அதுக்காக
ஒன்னப் புடிச்சேன்
தஞ்சாவூர் பொம்மையடி
தலைய ஆட்டுமடி
பொண்டாட்டிதாசன்னு
பேரை எடுப்பேன்
தப்பு நீ பண்ணி விட்டா
மன்னிக்கணும் மன்னிக்கணும்
உக்கி நீ போட வேணும்
எண்ணிக்கணும் எண்ணிக்கணும்
அம்மியில் நித்தமும்
மஞ்சள் அரைக்கணும்
காலையும் மாலையும்
சேலை துவைக்கணும்
ராமா ராமா சீதாவின் எண்ணப்படி
ஆட்டி வெச்சா
ஆட வேணும் நாதா
நான் மாட்டிக்கிட்டு
முழிக்கிறேனே சீதா
கேட்டா கேட்டத
வாங்கி குடுக்கிறேன்
ஆசொன்னாச் சொன்னத
செஞ்சு முடிக்கிறேன்
ராவா பகலா
ராஜாத்தி எண்ணப் படி
ஆட்டி வெச்சா
ஆட வேணும் நாதா
நான் மாட்டிக்கிட்டு
முழிக்கிறேனே சீதா
அத்தானே ஒன்னப் பெத்த
அசட்டு அப்பனும்தான்
சிட்டாக போட்டேனே
சொக்குப் பொடிதான்
அத்தானே ஒன்னப் பெத்த
அசட்டு அப்பனும்தான்
சிட்டாக போட்டேனே
சொக்குப் பொடிதான்
ஆனானப்பட்டவனே
ஆடி நிக்கிறப்போ
நான் கூட மானே
நீ சொன்னபடிதான்
மாவாட்டி வைக்கச் சொன்னா
ஆட்டிடுவேன் ஆட்டிடுவேன்
சப்பாத்தி தட்டச் சொன்னா
தட்டிடுவேன் தட்டிடுவேன்
இப்பவும் எப்பவும்
எட்டி இருக்கணும்
கட்டளை இட்டதும்
கட்டி அணைக்கணும்
கேள்வி ஏதும் கேக்காம இஷ்டப்படி
ஆட்டி வெச்சா
ஆட வேணும் நாதா
நான் மாட்டிக்கிட்டு
முழிக்கிறேனே சீதா
கேட்டா கேட்டத
வாங்கி குடுக்கிறேன்
சொன்னாச் சொன்னத
செஞ்சு முடிக்கிறேன்
ராவா பகலா
ராஜாத்தி எண்ணப்படி
ஆட்டி வெச்சா
ஆட வேணும் நாதா
நான் மாட்டிக்கிட்டு
முழிக்கிறேனே சீதா