Aayi Mahamayi

Aayi Mahamayi Song Lyrics In English


ஆஆ ஆஆஆ
ஆயி மகமாயி ஆயிரம்
கண்ணுடையாள் நீலி
திரிசூலி நீங்காத
பொட்டுடையால்
சமயபுரத்தாலே சாம்பிராணி
வாசகியே சமயபுரத்தை
விட்டு சடுதியிலே வாருமம்மா

மாயி மகமாயி
மணி மந்திர சேகரியே
எங்க ஆயி உமையானவளே
அஸ்தான மாரிமுத்தே

சிலம்பு பிறந்ததம்மா
சிவலிங்க சாலையிலே பிரம்பு
பிறந்ததம்மா பிச்சாண்டி
சந்நிதியில்

உடுக்கை பிறந்ததம்மா
உருத்திராட்ச பூமியிலே பாம்பை
பிறந்ததம்மா பளிங்கு மா
மண்டபத்தில்

மாயி மகமாயி
மணி மந்திர சேகரியே
எங்க ஆயி உமையானவளே
அஸ்தான மாரிமுத்தே

பரிகாசம்
செய்தவரை பதை
பதைக்க வெட்டிடுவே
பரிகாரம் கேட்டு விட்டா
பக்கத்துணை நீ இருப்பே

மேல்நாட்டு
பிள்ளையிடம் நீ போட்ட
முத்திரையை நீ பார்த்து
ஆத்தி வச்சா நாள் பார்த்து
பூஜை செய்வான்


மாயி மகமாயி
மணி மந்திர சேகரியே
எங்க ஆயி உமையானவளே
அஸ்தான மாரிமுத்தே

குழந்தை
வருந்துவது கோவிலுக்கு
கேட்கலையோ மைந்தன்
வருந்துவது மாளிகைக்கு
கேட்கலையோ

ஏழை குழந்தையம்மா
எடுத்தோர்க்கு பாலனம்மா உன்
காலில் பணிந்து விட்டான்
தயவுடன் நீ பாருமம்மா

கத்தி போல்
வேப்பிலையாம்
காளியம்மன் மருத்துவமாம்
ஈட்டி போல் வேப்பிலையாம்
ஈஸ்வரியின் அருமருந்தாம்
வேப்பிலையில் உள்ளிருக்கும்
விதைத்தனை யார் அறிவார்

ஆயா மனமிறங்கு
என் ஆத்தா மனம் இறங்கு
அம்மையே நீ இறங்கு என்
அன்னையே நீ இறங்கு