Abirami Enakkoru

Abirami Enakkoru Song Lyrics In English

அபிராமி எனக்கொரு பதில் சொல்லடி வேல் விழியால் பகை எரித்து துணை நில்லடி பாடுகிறேன் மனம் வாடுகிறேன் உன் திருவடி தேடுகிறேன்

பிள்ளை வரம் தந்தவளே பிணிக்கு மருந்தானவளே கண் திறந்து பார்த்துவிடு பிள்ளை உயிர் காத்துவிடு

அபிராமி எனக்கொரு பதில் சொல்லடி வேல் விழியால் பகை எரித்து துணை நில்லடி

ஓம் என்னும் ஓங்காரப் பொருளானவள் ஒளியாகி வெளியாகி உலகாள்பவள் காற்றாகி கனலாகி கடலானவள் கருவாகி உருவாகி உடலானவள்

வயிரவி மண்டலி மாலினி சூலி பயிரவி பஞ்சமி பார்வதி மனிதரும் தேவரும் முனிவரும் வந்து வணங்கிடும் தாயே அபிராமி தாயல்லவா மனம் மாறல்லையா இல்லை என் குரல் கேட்கலையா

பாம்புக் குடை கொண்டவளே பாளையத்து நாயகியே பிள்ளைக் குறை தீர்த்து விடு என் மகளை வாழ விடு

விழியாலே வினைத் தீர்க்கும் காமாட்சி நீ கிளியோடு மொழி பேசும் மீனாட்சி நீ வேற்காட்டில் அரசாளும் கருமாரி நீ வேப்பிலையில் துயர் போக்கும் மகமாயி நீ

நாயகி நான்முகி நாராயணி நீ சங்கவி சாயகி சாம்பவி நீ ககனமும் வானும் புவனமும் ஆட தாண்டவம் ஆடிடும் காளியும் நீ மாறலையா மனம் மாறலையா இல்லை நீ வெறும் கற்சிலையா

சூலம் கொண்டு காப்பவளே சூழும் வினை தீர்ப்பவளே கர்மவினை நீக்கிவிடு காலன் பயம் போக்கிவிடு