Acham Neeki |
---|
அச்சம் நீக்கி காக்கும் கைகள்
நச்சு பாம்பை நசுக்கும் கால்கள்
உச்ச நீதி காட்டும் கண்கள்
பெற்றவன் கற்றவன்
சூழ்ச்சி செய்தால் வீழ்ச்சி செய்வான்
பார்வையாலே ஆட்சி செய்வான்
காக்கி சட்டை புரட்சிக்காரன்
காட்சிதான் மீட்சிதான்
வெயில் மழை
அனல் புனல்
வீசிடும் புயலிலும்
விழிப்பவன்
புத்தியாலே
லத்தியாலே
மர்மத்தின் முடிச்சை
அவிழ்ப்பேன்
இவன் தன்னந்தனி
உளவுத்துறை ஊடகம்
இவன் கண்கள் பார்க்கும்
போலிகளின் நாடகம்
தடயத்தை காணும்
இதயம் இவன்
தொப்பி போட்ட
துப்பாக்கி இவன்
அச்சம் நீக்கி காக்கும் கைகள்
நச்சு பாம்பை நசுக்கும் கால்கள்
உச்ச நீதி காட்டும் கண்கள்
பெற்றவன் கற்றவன்
சூழ்ச்சி செய்தால் வீழ்ச்சி செய்வான்
பார்வையாலே ஆட்சி செய்வான்
காக்கி சட்டை புரட்சிக்காரன்
காட்சிதான் மீட்சிதான்
கூர்மையும் நீ
நேர்மையும் நீ
ஆணிவேர் பிடுங்கிடும்
பிரம்படி
கடல்கூட
பிளக்குமே
கம்பீரமான
கைத்தடி
காயம் போக்கி
நியாயம் காக்கும் உள்ளம்மடா
மாயம் கண்டு மர்மம் கண்டு
வெல்லுமடா
தடயத்தை காணும்
இதயம் இவன்
தொப்பி போட்ட
துப்பாக்கி இவன்
அச்சம் நீக்கி காக்கும் கைகள்
நச்சு பாம்பை நசுக்கும் கால்கள்
உச்ச நீதி காட்டும் கண்கள்
பெற்றவன் கற்றவன்
சூழ்ச்சி செய்தால் வீழ்ச்சி செய்வான்
பார்வையாலே ஆட்சி செய்வான்
காக்கி சட்டை புரட்சிக்காரன்
காட்சிதான் மீட்சிதான்