Achamillaa Paadhaiyil

Achamillaa Paadhaiyil Song Lyrics In English


ரம்பம் பம்பம் தரப்பம் தரப்பம்பம்பம்பம்
ரம்பம் பம்பம் தரப்பம் தரப்பம்பம்பம்பம்



அச்சம் இல்லா பாதையில்
எல்லோரும் செல்வோமே
திட்டம் போட்டு வாழ்விலே
முன்னேறி செல்வோமே
வானமே எல்லையாய் வீரமே கொள்கையாய்
நாளுமே வாழுவோம்

அச்சம் இல்லா பாதையில்
எல்லோரும் செல்வோமே
திட்டம் போட்டு வாழ்விலே
முன்னேறி செல்வோமே

வானமே எல்லையாய் நெஞ்சில்
துணிவெனும் கொடியினை ஏற்றி வைப்போம்
தொட்டது துலங்கிட தோள் கொடுப்போம்
போர் தொடுப்போம் நாள் குறிப்போம்
இந்த நிலமைகள் மாறிட வழி வகுப்போம்

ஆண்கள் கையில் பெண்கள் என்றும்
அடிமையில்லையேஹோ
ஆன மட்டும் சொல்லிப் பார்த்தும்
உணரவில்லையே

மாலை சூட தேடும் போது
மனித சந்தையில்
பெண்கள் முன்னே ஆண்கள் தம்மை
விலைக்கு விற்கையில்
உண்மையில் பெண்ணிடம்
அங்கு விலைமகன் ஆவது ஆண்மகனே

லல லல லா லல லல லா
லலலல லலலல லலலல லா

அச்சம் இல்லா பாதையில்
எல்லோரும் செல்வோமே
திட்டம் போட்டு வாழ்விலே
முன்னேறி செல்வோமே


லால்ல லா லால்ல லா
லால்ல லல்லால லா லாலல லா
லால்ல லா லால்ல லா
லால்ல லல்லால லா லாலல லா

ஏழை சின்ன பொய்யை சொன்னால்
தலையில் குட்டுறான் ஹோ
மேடை ஏறி பொய்யை சொன்னால்
கையைத் தட்டுறான்

இல்லையென்று கையை வச்சா
சிறையில் போடுறான்
கடத்தல்காரன் கண்ணில் பட்டால்
வணக்கம் போடுறான்

நீதியும் தூங்குது
இந்த நிலமைகள் என்றைக்கு மாறுவது

லல லல லா லல லல லா
லலலல லலலல லலலல லா

அச்சம் இல்லா பாதையில்
எல்லோரும் செல்வோமே
திட்டம் போட்டு வாழ்விலே
முன்னேறி செல்வோமே
வானமே எல்லையாய் வீரமே கொள்கையாய்
நாளுமே வாழுவோம்

நெஞ்சில் துணிவெனும்
கொடியினை ஏற்றி வைப்போம்
தொட்டது துலங்கிட தோள் கொடுப்போம்
போர் தொடுப்போம் நாள் குறிப்போம்
இந்த நிலமைகள் மாறிட வழி வகுப்போம்

ரம்பம் பம்பம் தரப்பம் தரப்பம்பம்பம்பம்
ரம்பம் பம்பம் தரப்பம் தரப்பம்பம்பம்பம்
ரம்பம் பம்பம் தரப்பம் தரப்பம்பம்பம்பம்
ரம்பம் பம்பம் தரப்பம் தரப்பம்பம்பம்பம்