Adam Evaal

Adam Evaal Song Lyrics In English


ஆஅஆஆஆஅஆஆ பெண் மற்றும் ஆஆஅஅ ஆஆஅஅஆஆஅஅஆஆ

ஆதாம் ஏவாள் மூட்டிய நெருப்பு அடுத்து வந்தவர் கூட்டிய நெருப்பு அந்த நெருப்புஎந்த நெருப்பு

கண்கள் இரண்டில் பற்றும் நெருப்பு கடைசி வரைக்கும் தொற்றும் நெருப்பு அந்த நெருப்புஅந்த நெருப்பு எந்த நெருப்புஎந்த நெருப்பு

உள்ளத்தில் உறவை வார்க்கும் நெருப்பு உன்னையும் என்னையும் ஈர்க்கும் நெருப்பு அந்த நெருப்புகாதல் நெருப்பு

ம்ம்ம்ம்ம்ஆதாம் ஏவாள் மூட்டிய நெருப்பு அடுத்து வந்தவர் கூட்டிய நெருப்பு அந்த நெருப்பு காதல் நெருப்பு



ஆஆஆகாதல் என்பது காற்றை போல காலங்கள் தேசம் பார்ப்பதில்லை காதல் என்பது தீயை போல எதிலும் பற்றும் கேள்வி இல்லை

காதல் என்பது வெள்ளம் போல கரைகளை வெள்ளம் கேட்பதில்லை காதல் என்பது ஒட்டகம் போல பாலைவனத்திலும் வேர்ப்பது இல்லை

இதயம் காதல் கொண்டுவிட்டால் இமயம் கூட தவிடுபுடி காதல் கட்டளை இட்டுவிட்டால் வானம் வந்து வணங்கும்மடி


ஆவி சிலிர்த்து சொல்லுகிறேன் ஐ ஆம் லிவ் லவ் அண்டம் நடுங்க சொல்லுகிறேன் ஐ ஆம் லிவ் லவ்

ஆதாம் ஏவாள் மூட்டிய நெருப்பு அடுத்து வந்தவர் கூட்டிய நெருப்பு அந்த நெருப்புஎந்த நெருப்பு

கண்கள் இரண்டில் பற்றும் நெருப்பு கடைசி வரைக்கும் தொற்றும் நெருப்பு அந்த நெருப்பு காதல் நெருப்பு



காதல் என்பது பூ வனம் இல்ல போர்க்களம் என்றால் என்ன செய்வாய் மாலை விடுத்து காதல் கையில் வாளை எடுத்தால் என்ன செய்வாய்

மாலை ஏந்தி வந்தாலும் ஒரு வாளை ஏந்தி வந்தாலும் இரண்டையும் ஒன்றாய் பாவிப்பேன் நான் இதயம் எதிர்த்து சாதிப்பேன்

அயிரை மீன்கள் துணிந்து விட்டால் அட்லாண்டிக் கடல் பெரிதல்ல சிட்டுகுருவிகள் நிமிர்ந்து விட்டால் சீனச் பெரும்சுவர் தடையல்ல

ஆவி சிலிர்த்து சொல்லுகிறேன் ஐ லவ் யூ அண்டம் நடுங்க சொல்லுகிறேன் ஐ லவ் யூ