Adi Raakayee

Adi Raakayee Song Lyrics In English


அடி ராக்காயி
மூக்காயி குப்பாயி
செவப்பாயி கஸ்தூரி மீனாக்‌ஷி
தங்கப்பல் காரைய்யா
தங்கமகளுக்கும்
வாத்தியார் அய்யாவுக்கும்
தை மாசம் கல்யாணம்
நெல்லு குத்த வாங்கடியோ

சுத்த சம்பா பச்ச நெல்லு
குத்தத்தா வேணும்
முத்து முத்தா பச்சரிசி
அள்ளத்தா வேணும்
முல்லை வெள்ளி போல அன்னம்
பொங்கத்தா வேணும்
நம்ம வீட்டு கல்யாணம்
இது நம்ம வீட்டு கல்யாணம்

சுத்த சம்பா பச்ச நெல்லு
குத்தத்தா வேணும்
முத்து முத்தா பச்சரிசி
அள்ளத்தா வேணும்
முல்லை வெள்ளி போல அன்னம்
பொங்கத்தா வேணும்
நம்ம வீட்டு கல்யாணம்
இது நம்ம வீட்டு கல்யாணம்

பத்தோடு ஒண்ணு
பலகாரம் பன்ன
சத்தாக மாவிடிங்க
ஓ ஒய்யா

கல்லோடு உமியும்
சேராம பாத்து
பக்குவமா இடிங்க

பஞ்சு பஞ்சாக
வரணும் பணியாரம்
வெள்ளி நூலாக
வரணும் இடியாப்பம்
பஞ்சு பஞ்சாக
வரணும் பணியாரம்
வெள்ளி நூலாக
வரணும் இடியாப்பம்

இதுதானே
கல்யாண விருந்தென்று
ஊரே பாரட்ட வேணும்

சுத்த சம்பா பச்ச நெல்லு
குத்தத்தா வேணும்
முத்து முத்தா பச்சரிசி
அள்ளத்தா வேணும்
முல்லை வெள்ளி போல அன்னம்
பொங்கத்தா வேணும்
நம்ம வீட்டு கல்யாணம்
இது நம்ம வீட்டு கல்யாணம்

லாலி லல்லி லாலி லல்லி
லாலி லாலி லாலி லாலி
லாலி லல்லி
லாலி லாலி லாலி லாலி


மாப்பிள்ளை பொண்ணு
மணவறை காண
பொன்னாலே கோலமிடுங்க
ஓ ஒய்யா

மாவிலை தென்னை
இளங்குருத்தாக
வீடெங்கும் ஆடவிடுங்க

வள்ளி மானாக
வரணும் மணபொண்ணு
தங்க வேலாக
வரணும் மாப்பிள்ளை
வள்ளி மானாக
வரணும் மணபொண்ணு
தங்க வேலாக
வரணும் மாப்பிள்ளை

இதுதானே
கல்யாணமென்று
ஊரே பாரட்ட வேணும்

சுத்த மஞ்சள்
பட்டுச்சேல கட்டதான் வேணும்
முத்து முத்தா மல்லிகை பூ
சூடத்தான் வேணும்

சுத்த மஞ்சள்
பட்டுச்சேல கட்டதான் வேணும்
முத்து முத்தா மல்லிகை பூ
சூடத்தான் வேணும்

முல்லை வெள்ளி போல பொண்ணு
மின்னத்தான் வேணும்
நம்ம வீட்டு கல்யாணம்
இது நம்ம வீட்டு கல்யாணம்

நம்ம வீட்டு கல்யாணம்
இது நம்ம வீட்டு கல்யாணம்
நம்ம வீட்டு கல்யாணம்
இது நம்ம வீட்டு கல்யாணம்