Akkam Pakkam Parada

Akkam Pakkam Parada Song Lyrics In English


இசை அமைப்பாளர் : இளையராஜா

அக்கம் பக்கம் பாரடா
சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன
சொல்லு ராசா

அக்கம் பக்கம் பாரடா
சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன
சொல்லு ராசா

வாயில் என்ன மந்திரமா
மனசு என்ன எந்திரமா
சாமியிடம் பேசுது புள்ள
தாயழுகை கேட்கவுமில்லை
சாமியிடம் பேசுது புள்ள
தாயழுகை கேட்கவுமில்லை

அக்கம் பக்கம் பாரடா
சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன
சொல்லு ராசா

அம்மா பசி என்றொரு கூக்குரல்
அதுதான் இனி தேசிய பாஷை
கட்சிக் கொடிகள் ஏறுது அங்கே
கஞ்சிப் பானை தெருவில் இங்கே

சுதந்திர நாடு
சோத்துக்குக் கேடு
சொல்லாதே சாமி
நம்ம பூமியோ எப்போதும்
தர்மம் செஞ்ச பூமி


அக்கம் பக்கம் பாரடா
சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன
சொல்லு ராசா

தேசமிது செஞ்சது உனக்கு
ஏராளம் இங்கே உண்டு
நீ என்ன செஞ்ச அதுக்கு
ஒன்னக் கேட்டு நீ பதில் சொல்லு

நமக்கென்ன போடா போன்னு
நழுவுற நேரம் பார்த்து
நாடு முழுதும் தீயாப் போனா
வீடு மட்டும் ஏது

அக்கம் பக்கம் பாரடா
சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன
சொல்லு ராசா

வாயில் என்ன மந்திரமா
மனசு என்ன எந்திரமா
சாமியிடம் பேசுது புள்ள
தாயழுகை கேட்கவுமில்லை

அக்கம் பக்கம் பாரடா
சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன
சொல்லு ராசா