Alai Alai Alaiyai

Alai Alai Alaiyai Song Lyrics In English




அலை அலைஅலையாய்
அலையுது மனசு பூவே செம்பூவே
குளு குளு நிலவாய்
கொஞ்சுற வயசு வா வா நீ இங்கே

நீ மின்சாரம் போல்
என்னுள் வந்து மோதி சென்றாயே
ஒரு பேனா முள்ளாய்
எந்தன் நெஞ்சில் எழுதிப் போனாயே

ஒரு சிற்பம் நீதான்
சிற்பி என்னை செதுக்கி பார்த்தாயே

அலை அலை அலையாய்
அலையுது மனசு பூவே செம்பூவே
குளு குளு நிலவாய்
கொஞ்சுற வயசு வா வா நீ இங்கே



நிலவில் இருந்த படி
நாம் மண்ணை பார்க்கையிலே
சீன சுவரழகு
ஒரு கோடாக தோன்றுமே

மண்ணில் இருந்த படி
வான் நிலவை பாக்கையிலே
நாமும் நடந்த தடம்
அது லேசாக தோன்றுமே

அன்பே உன் முத்தங்கள் சேமிக்கவே
அரசாங்க வங்கிக்குள் இடம் கேக்கிறேன்

கடவுள்கள் என் முன்பு வந்தாலுமே
உனக்கேதான் முதல் பூஜை நான் செய்கிறேன்

சிரபுஞ்சி மழை ஆனேன்
மேகம் நீ தான்

அலை அலை அலையாய்
அலையுது மனசு பூவே செம்பூவே
குளு குளு நிலவாய்
கொஞ்சுற வயசு வா வா நீ இங்கே




எந்தன் ஆசைகளை
நான் எண்ணி பார்க்கையிலே
விண்மீன் அத்தனையும்
ஓ கொஞ்சம் போல் தோன்றுதே

வெய்யில் வீசையிலே
உன் வேட்கை போக்கிடவே
தென்னங் கீற்றுகளால்
நான் உன் வீட்டை போற்றுவேன்

அடடா என் செவ்வாயில்
செவ்வாய் கிரகம்
நீ வந்து ஆராய்ச்சி செய்தால் சுகம்

அன்பே நீ அழகான
பெண்ணோவியம்
உயிரோடு உயிர் சேர வேண்டும் வரம்

பலநூறு வருடங்கள்
வாழ்க்கை வேண்டும்

அலை அலை அலையாய்
அலையுது மனசு பூவே செம்பூவே
குளு குளு நிலவாய்
கொஞ்சுற வயசு வா வா நீ இங்கே

நீ மின்சாரம் போல்
என்னுள் வந்து மோதி சென்றாயே
ஒரு பேனா முள்ளாய்
எந்தன் நெஞ்சில் எழுதி போனாயே

ஒரு சிற்பம் நீதான்
சிற்பி என்னை செதுக்கி பார்த்தாயே

அலை அலை அலையாய்
அலையுது மனசு பூவே செம்பூவே
குளு குளு நிலவாய்
கொஞ்சுற வயசு வா வா நீ இங்கே