Alai Alaiyaga Azhagazhakaga

Alai Alaiyaga Azhagazhakaga Song Lyrics In English


பாடகர்கள் : எஸ் பி பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

பாடலாசிரியர் : வாலி

அலை அலையாக அழகழகாக நீர் பாயும் ஓடைக் கரையில் நீராடும் நீலக் குயில்கள் எந்த நாளும் வாழ்க

அலை அலையாக அழகழகாக நீர் பாயும் ஓடைக் கரையில் நீராடும் நீலக் குயில்கள் எந்த நாளும் வாழ்க

நிலமகள் குளிர் பெறும் கார் காலமே பனிமழை பொழிந்திடும் வெண் நீல ஆகாயமே நிலமகள் குளிர் பெறும் கார் காலமே பனிமழை பொழிந்திடும் வெண் நீல ஆகாயமே

இயற்கையின் வனப்பும் இளமையின் துடிப்பும் இணைந்திடும் பொழுதல்லவோ

அலை அலையாக அழகழகாக நீர் பாயும் ஓடைக் கரையில் நீராடும் நீலக் குயில்கள் எந்த நாளும் வாழ்க


ரதி மதன் ரசனைகள் ஏராளமோ ரகசியம் இருவரும் கொண்டாடும் ஏகாந்தமோ உதடுகள் எழுதும் கவிதைகள் முழுதும் உணர்ச்சியை பிழிந்திடுமோ

அலை அலையாக அழகழகாக நீர் பாயும் ஓடைக் கரையில் நீராடும் நீலக் குயில்கள் எந்த நாளும் வாழ்க

மலைமுடி மடியென தாலாட்டுமோ மணி முகில் குழந்தை போல் வந்தாடப் பாலூட்டுமோ மலைமுடி மடியென தாலாட்டுமோ மணி முகில் குழந்தை போல் வந்தாடப் பாலூட்டுமோ

அருகினில் இருந்து அவள் தரும் விருந்து அவனுக்கு இனித்திடுமோ

அலை அலையாக அலை அலையாக அழகழகாக அழகழகாக நீர் பாயும் ஓடைக் கரையில் நீராடும் நீலக் குயில்கள் இருவர் : எந்த நாளும் வாழ்க