Amma Amma Male |
---|
இசை அமைப்பாளர் : இளையராஜா
அம்மா அம்மா
எந்தன் ஆருயிரே
கண்ணின் மணியே
தெய்வம் நீயே
ஓஓஓஓ
அம்மா அம்மா
எந்தன் ஆருயிரே
நானும் நீயும்
என்றும் ஓருயிரே
இரு கண்ணின் மணியே
ஓஓஓஓ
தெய்வம் நீயே
ஓஓஓஓ
அம்மா அம்மா
எந்தன் ஆருயிரே
நானும் நீயும்
என்றும் ஓருயிரே
பூவிழி ஓரம்
ஓர் துளி நீரும்
நீ வடித்தால்
மனம் தாங்காது
பொன்முகம் கொஞ்சம்
வாடி நின்றாலும்
நான் துடிப்பேன்
வலி தாளாது
பத்து மாசம் சுமந்து
பட்ட பாடும் மறந்து
பிள்ளைச் செல்வம் பிறக்க
அள்ளிக்கையில் எடுத்த
தாயும் நீயே
தவமிருந்தாயே
வாடுதம்மா பிள்ளையே
வாட்டுவதோ என்னை நீயே
அம்மா அம்மா
எந்தன் ஆருயிரே
நானும் நீயும்
என்றும் ஓருயிரே
பாதைகள் மாறி
ஓடிய கன்றை
தாய்ப்பசுதான்
இங்கு ஏற்காதா
கூட்டிலிருந்து
குஞ்சு விழுந்தால்
தாய்க்குருவி
அள்ளிச் சேர்க்காதா
நல்ல காலம் பிறக்க
உன்னை நானும் அறிந்தேன்
உந்தன் கண்கள் திறக்க
இங்கு பாடல் படித்தேன்
போதும் போதும்
பிரிந்தது போதும்
வாடுதம்மா பிள்ளையே
வாட்டுவதோ என்னை நீயே