Amma Endrazhaikatha

Amma Endrazhaikatha Song Lyrics In English


அம்மா என்றழைக்காத
உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது

அம்மா என்றழைக்காத
உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே

அபிராமி சிவகாமி
கருமாரி மகமாயி
திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா
அன்னைக்கு அன்றாடம்
அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறுத்தொண்டன்
நான்தானம்மா

பொருளோடு புகழ் வேண்டும்
மகனல்ல தாயே
உன் அருள் வேண்டும் எனக்கென்றும்
அது போதுமே

அடுத்திங்கு பிறப்பொன்று
அமைந்தாலும் நான் உந்தன்
மகனாகப் பிறக்கின்ற
வரம் வேண்டுமே
அதை நீயே தருவாயே

அம்மா என்றழைக்காத
உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே

பசும் தங்கம் புது வெள்ளி
மாணிக்கம் மணிவைரம்
அவை யாவும் ஒரு தாய்க்கு
ஈடாகுமா


விலை மீது விலை வைத்துக்
கேட்டாலும் கொடுத்தாலும்
கடை தன்னில் தாயன்பு
கிடைக்காதம்மா

ஈரயைந்து மாதங்கள்
கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும் பாடு
அறிவேனம்மா

ஈரேழு ஜென்மங்கள்
எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட
கடன் தீருமா
உன்னாலே பிறந்தேனேஏ

அம்மா என்றழைக்காத
உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது

அம்மா என்றழைக்காத
உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே