Amma Un Pillai Naan

Amma Un Pillai Naan Song Lyrics In English


அம்மா உன் பிள்ளை
நான் அறியாததென்னவோ
உன் பாடல் ஒன்றுதான் என்
சொந்தம் என்பதோ என்னை
என்றும் காக்கவே என்னை
என்றும் காக்கவே இது ஒன்று
போதுமா அம்மா ம்ம்

அம்மா உன் பிள்ளை
நான் அறியாததென்னவோ

காட்டோரம் ஓடும்
நீரே நதியானதே காட்டோரம்
ஓடும் நீரே நதியானதே
ரோட்டோரமாய் வாழ்வு
விதியானதே விதியென்னும்
எழுத்தெல்லாம் விழிநீரில்
அழியும் ஓர் நேரம்

அம்மா உன் பிள்ளை
நான் அறியாததென்னவோ

காவல் இல்லாத
ஜீவன் கண்ணீரிலே காவல்
இல்லாத ஜீவன் கண்ணீரிலே
கரை கண்டிடாத ஓடம்
தண்ணீரிலே கரையில்லா
துயருக்கோர் கரைபோட்டு
காட்டவா நீயே


அம்மா உன் பிள்ளை
நான் அறியாததென்னவோ

ஜென்மங்களில் பாவம்
பெண் ஜென்மமே ஜென்மங்களில்
பாவம் பெண் ஜென்மமே பந்தங்கள்
என்று சொன்னால் துன்பங்களே
பெண்களை சிலையிலே
தொழுகின்ற உலகமே
ஏன் சொல்லு

அம்மா உன் பிள்ளை
நான் அறியாததென்னவோ
என்னை என்றும் காக்கவே
என்னை என்றும் காக்கவே
இது ஒன்று போதுமா அம்மா
ம்ம்ம்

அம்மா உன் பிள்ளை
நான் அறியாததென்னவோ
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்