Anale Anale

Anale Anale Song Lyrics In English

இசை அமைப்பாளர் : ஜிப்ரான்

அனலே அனலே நீ அழகின் அனலே கனலே கனலே என் கனவின் கனலே

நகலே நகலே நீ நிலவின் நகலே நீ வாலியின் பாடலே

இரவும் பகலும் உன் நினைவின் தணலே நினைத்தே நகரும் என் நகரா பகலே சிறகா சிறையா உன் விழியின் மடலே நீ தேடிய தேடலே

சகியே சகியே என் கனவின் வழியே நினைவை திருடும் உன் விழியே உயிரின் விசையே உன் இதழின் இசையே என் பாதை உன் திசையே

பழகிட நினைத்தேன் உனை பிரியும் பொழுதே மெழுகென கரைந்தேன் உனை புரியும் பொழுதே சிறு சிறு சிணுங்கல் வரும் கணங்கள் சுகமே கண் தேடுதே தேடுதே

இரு வரியாய் நீ நான் இணைந்த குறளே தனி தனி இருந்தால் இல்லை பொருளே ஓ ஓ ஓ ஒரு பதில் தருவாய் அட உயிராய் வருவாய் என் காட்சிகள் மாறுதே

நீயே இன்றி நானே தேயா தேய்பிறை தானே ஆதலால் காதலை காதல் செய்வோம் நாமே இடைவெளி கொடுக்கும் துயரங்கள் கொடுமை உனையன்றி எனக்கும் விடியல்கள் வெறுமை தீராத தீராத காதல் தீயே