Anbe Anbe Neeye |
---|
ஹாஆஅஆஅஹா
ஹாஆஅஆஅஹா
ஹாஹாஹாஆஅ
அன்பே அன்பே நீயே எந்தன்
ஆதாரம் நான் உன் தாரம்
நடந்தால் நீ
நிழல் போல் நான்
நினைத்தால் நீ
மனம் போல் நான்
அன்பே அன்பே நீயே எந்தன்
ஆதாரம் நான் உன் தாரம்
ஆதாரம் நான் உன் தாரம்
மாதவன் குளிக்கும் கங்கை இங்கே
காதலில் அணைக்கும் மங்கை இங்கே
எனக்கொரு கோயில் இல்லை
வணங்கிடும் தெய்வம் இல்லை
அனைத்திலும் உன்னைக் கண்டேன்
உனக்கென என்னைத் தந்தேன்
நீதான்இங்கே
நீதான் இங்கே நான் என்பது
நான்தான் என்றும் நீ என்பது
அன்பே அன்பே நீயே எந்தன்
ஆதாரம் நான் உன் தாரம்
காக்கையும் குயிலும் வண்ணம் ஒன்று
கூவிடும் குரலில் பேதம் உண்டு
உனக்கென பாடல் சொல்லும்
வனக்குயில் நான்தான் என்று
அறிந்தவன் நீதான் இங்கு
மயக்கமும் ஏன்தான் இன்று
வாழ்வோம்வா வா
வாழ்வோம் வா வா ஏகாந்தமே
இன்பம் இன்றும் ஏராளமே
அன்பே அன்பே நீயே எந்தன்
ஆதாரம் நான் உன் தாரம்
நடந்தால் நீ
நிழல் போல் நான்
நினைத்தால் நீ
மனம் போல் நான்
அன்பே அன்பே நீயே எந்தன்
ஆதாரம் நான் உன் தாரம்
ஆதாரம் நான் உன் தாரம்