Anbe Vaa

Anbe Vaa Song Lyrics In English


அன்பே வா அழைக்கும் முன்பே வா அன்பே வா அழைக்கும் முன்பே வா வெண் பஞ்சு மேகம் எங்கெங்கு போகும் வெண் பஞ்சு மேகம் எங்கெங்கு போகும் அதில் நாமும் போவோம் இங்கே வா

உந்தன் நினைவோடு இன்பக் கனவோடு நித்தம் தவித்தேனே நெஞ்சம் துடித்தேனே இது வானும் மண்ணும் சேரும் நேரம் வா வா வா

அன்பே வா அழைக்கும் முன்பே வா

ஹே ஹம் தும் சே பியார் கரேங்கே துனியா சே ஹம் நஹி டரேங்கே சோனே கா தில் சான்ஸா முக்குடா தும் சாசா தில் கஹா முலேகா

ஏதேதோ இன்பக் கனவு என் கண்ணில் கோடி நிலவு நீ தந்தாய் காதல் உறவு வேறென்ன வாழ்வில் வரவு

பௌர்ணமி ராவில் நிலாவில் உலாவும் சுகங்கள் பாவை என் வாழ்வில் பதக்கம் பதிக்கும் நகங்கள்

இனி நாளும் சந்திப்போம் மணநாளை சிந்திப்போம் இது வாடைக் காற்றில் வாடும் ரோஜா வா வா வா

அன்பே வா அழைக்கும் முன்பே வா


கண்ணோடு வந்து நுழைந்தாய் ராராரரா நெஞ்சோடு வந்து நிறைந்தாய் ஆஹாஹா என்னோடு ஒன்று கலந்தாய் ராராரரா இதழோடு தேனைப் பொழிந்தாய்

வாடையில் வாடும் ஆஹா மனத்தின் ஓஹோ கொதிப்பை அணைப்பாய் பூவிழித் தேடும் போலோ சுகத்தை சபாஷ் எடுத்து கொடுப்பாய்

இரு கைகள் பின்னட்டும் அதில் மின்னல் மின்னட்டும் இனி நானும் நீயும் தேனும் பாலும் வா வா வா

அன்பே வா அழைக்கும் முன்பே வா வெண் பஞ்சு மேகம் எங்கெங்கு போகும் அதில் நாமும் போவோம் இங்கே வா ராராரரா

உந்தன் நினைவோடு இன்பக் கனவோடு நித்தம் தவித்தேனே நெஞ்சம் துடித்தேனே இது வானும் மண்ணும் சேரும் நேரம் வா வா வா