Andavanai Paarkanum Avanukku

Andavanai Paarkanum Avanukku Song Lyrics In English


ஆண்டவனப் பாக்கணும்
அவனுக்கும் ஊத்தணும்
அப்போ நான் கேள்வி கேக்கனும் சர்வேசா
தலைஎழுத்தெந்த மொழியடா ஓ ஓ
தப்பி செல்ல என்ன வழியடா

ஆண்டவனப் பாக்கணும்
அவனுக்கும் ஊத்தணும்
அப்போ நான் கேள்வி கேக்கனும் சர்வேசா
தலைஎழுத்தெந்த மொழியடா ஓ ஓ
தப்பி செல்ல என்ன வழியடா

நாவுக்கு அடிமைதான் ஆறு வயசுல
பூவுக்கு அடிமை பதினாறு வயசுல
நோவுக்கு அடிமைதான் பாதி வயசுல
சாவுக்கு அடிமை அட நூறு வயசுல

அடிமைகளாய் பொறந்துவிட்டோம்
அதை மட்டும்தான் மறந்துவிட்டோம்
அந்த பாசம் அன்பு கூட
சிறைவாசம் தானடா

ஆண்டவனப் பாக்கணும்
அவனுக்கும் ஊத்தணும்
அப்போ நான் கேள்வி கேக்கனும் சர்வேசா
தலைஎழுத்தெந்த மொழியடா ஆ ஹாஓஓ
தப்பி செல்ல என்ன வழியடா


காதலிக்க எனக்கு ஒரு யோகமில்லையே
ஆண்டவனே உனக்கும் அனுதாபமில்லையே
ராஜ்ஜியமும் இருக்கு அதில் ராணி இல்லையே
காசு பணம் இருக்கு ஒரு காதல் இல்லையே

சொல்ல எனக்கு வழி இல்லையே
சொல்லி முடிக்க மொழி இல்லையே
அழுதாலும் தொழுதாலும்
தெய்வம் பார்க்கவில்லையே

ஆண்டவனப் பாக்கணும்
அவனுக்கும் ஊத்தணும்
அப்போ நான் கேள்வி கேக்கனும் சர்வேசா
தலைஎழுத்தெந்த மொழியடா டேய் ஹஹஹா
தப்பி செல்ல என்ன வழியடா