Anthi Maalaiyil |
---|
ஆஆஆஆ
ஆ ஆ ஆ ஆ
ஆஆஆஆ
ஆ ஆ ஆ ஆ
தம்த னம்தம் தம்த னம்தம்
தம்த னம்தம் தம்த னம்தம்
ஆஆஆஆஆ
அந்தி மாலையில் மலர்ச் சாலையில்
ஒரு காதல் ஊர்கோலம்
இந்தப் பூ வனம் உந்தன் சீதனம்
இனி நாளும் தெய்வீகம்
அந்தி மாலையில் மலர்ச் சாலையில்
ஒரு காதல் ஊர்கோலம்
அதிகாலை வானம் போல் ஆகும்
இவள் தேகம் பூவாகும்
அவன் பார்வை தானே வேலாகும்
அவள் மேனி நூலாகும்
விரல் மீது விரல் மோதும்
இது தாகம் தோன்றும் மாதம்
பொன் மேகம் என் வாசல் வந்து
தேன் தெளிக்கும்
அந்தி மாலையில் மலர்ச் சாலையில்
ஒரு காதல் ஊர்கோலம்
ஆஆஆஆ
ஆ ஆ ஆ ஆ
ஆஆஆஆ
ஆ ஆ ஆ ஆ
இவள் கன்னம் எங்கும் கோலங்கள்
இதழ் போடும் நேரங்கள்
உனைக் காவல் காக்கும் நாணங்கள்
அதைத் தாண்டும் மோகங்கள்
சகவாசம் சுகவாசம்
அது காதல் வார்த்தை பேசும்
என்னோடு பொன் ஓடை ஒன்று ஓடி வரும்
அந்தி மாலையில் மலர்ச் சாலையில்
ஒரு காதல் ஊர்கோலம்
இந்தப் பூ வனம் எந்தன் சீதனம்
இனி நாளும் தெய்வீகம்
அந்தி மாலையில் மலர்ச் சாலையில்
ஒரு காதல் ஊர்கோலம்