Anubavi Raja Anubavi |
|---|
அனுபவி ராஜா அனுபவி,
அனுபவி ராஜா அனுபவி
அனுபவி ராஜா அனுபவி
அனுபவி ராஜா அனுபவி
அழகுக் கிளிகளின் கையாலே
அடிவிழுந்தாலும் சந்தோஷம்
அதிலே தோன்றும் அடையாளம்
அது ஒரு மாதிரி உல்லாசம்
இருவர் : அனுபவி ராஜா அனுபவி,
அனுபவி ராஜா அனுபவி
அஹ ஹ ஹோ
ஒ ஹோ ஹோ
அஹ ஹ ஹோ
ஒ ஹோ ஹோ
நடுத்தெருவில் ஒரு மகராஜா
பார்த்தாரே ஒரு பெண்ணை
லாபம் நஷ்டம் பாராமல்
போனாரே அவள் பின்னே
கட்டுக்காவலை மீறிய கண்கள்
வட்டம் போட்டதடி
பட்டுத் தாவணி மூடிய மேனி
கட்டிப் போட்டதடி
இன்னும் பாரடி கண்ணும் நெஞ்சும்
எதையோ தேடுதடி
உண்மைதானடி கன்னம் ரெண்டும்
இன்னும் கேட்குதடி
இருவர் : அனுபவி ராஜா அனுபவி
அனுபவி ராஜா அனுபவி
அழகுக் கிளிகளின் கையாலே
அடிவிழுந்தாலும் சந்தோஷம்
அதிலே தோன்றும் அடையாளம்
அது ஒரு மாதிரி உல்லாசம்
அடுத்த வீட்டுப் பெண்ணெல்லாம்
அம்மான் மகளோ ராஜா
அம்மான் மகள்தான் என்றாலும்
சும்மா வருமோ ராஜா
சாலை வழியே போகும் பெண்ணை
ஜாடை காட்டாதே
சேலை போகும் பாதை எல்லாம்
வாலை நீட்டாதே
அங்கும் இங்குமே கண்கள் ஓடினால்
அனுபவம் இது ராஜா
மங்கை கைகளில் வாங்கும் பூஜை
மாறட்டும் மகராஜா
இருவர் : அனுபவி ராஜா அனுபவி
அனுபவி ராஜா அனுபவி
அழகுக் கிளிகளின் கையாலே
அடிவிழுந்தாலும் சந்தோஷம்
அதிலே தோன்றும் அடையாளம்
அது ஒரு மாதிரி உல்லாசம்
இருவர் : அனுபவி ராஜா அனுபவி
அனுபவி ராஜா அனுபவி
