Appan Yaru

Appan Yaru Song Lyrics In English


ஆரிரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ

அப்பன் யாரு அம்மா யாரு
நானும் பார்க்கல
கண்ணீரத்தான் கண்டேனம்மா
தாய்ப்பால் பார்க்கல

பொறக்கும் கொழந்தைக்கெல்லாம்
பட்டு தொட்டில்தான்
எனக்கு தொட்டிலென்னமோ
குப்பத் தொட்டிதான்

அப்பன் யாரு அம்மா யாரு
நானும் பார்க்கல
கண்ணீரத்தான் கண்டேனம்மா
தாய்ப்பால் பார்க்கல

ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆரிரோ

என்னமோ உலகத்தையே புடிக்கலையே
என்னையும் உலகத்துக்கு புடிக்கலையே
துன்பத்துக்கு பொறந்தவன் இந்தப் புள்ளையே
என்ன தொப்புள்கொடி அறுத்தவ கொல்லவில்லையே

அழுதேனேஓஓஒ
அழுதேனே அழுதேனே
கண்ணீருக்கும் ஈரமில்ல

அப்பன் யாரு அம்மா யாரு
நானும் பார்க்கல
கண்ணீரத்தான் கண்டேனம்மா
தாய்ப்பால் பார்க்கல


ஆரிரோ ஆரிரோ

நானழுத நேரத்திலே யாரும் வரல்ல
ஊரழுத வேளையிலே நானும் வரல
எனக்கென்ன சாபமோ வெளங்கலையே
துப்பறிஞ்சு பார்க்குறேன் தொலங்கலையே

திசையெங்கேஓஓஓ
திசையெங்கே திசையெங்கே
வழிகாட்டும் ஜீவனில்ல

அப்பன் யாரு அம்மா யாரு
நானும் பார்க்கல
கண்ணீரத்தான் கண்டேனம்மா
தாய்ப்பால் பார்க்கல

பொறக்கும் கொழந்தைக்கெல்லாம்
பட்டு தொட்டில்தான்
எனக்கு தொட்டிலென்னமோ
குப்பத் தொட்டிதான்

அப்பன் யாரு அம்மா யாரு
நானும் பார்க்கல
கண்ணீரத்தான் கண்டேனம்மா
தாய்ப்பால் பார்க்கல