அப்பப்பா பாடல் வரிகள்

Starring Karthi, Lakshmi Menon
Movie Komban
Music ByG. V. Prakash Kumar
Lyric By Mahalingam
SingersShreya Ghoshal, G. V. Prakash Kumar
Year 2015

Appappa Song Lyrics In English

அப்பப்பா காய்ச்சல் விட்டு போச்சு
அச்சச்சோ காதல் நோவுஆச்சு
முத்தத்தில் பத்து போடு
மொத்தத்தில் என்னை கஞ்சி காச்சு

பத்தியத்த முறிக்காத உங்க கையி
முப்பாலில் மூணாம் பால் சோ்த்து வையி
அப்பாவா நீயாகும் சேட்டை செய்யி

வெக்கத்த பக்கம் வந்து பாத்து
வீராப்பு மட்டு பட்டு போச்சு
மல்லி பூ கூந்தல் மோந்து
பாத்து மச்சமும் நட்சத்திரம் ஆச்சு

தப்பு தண்டா செய்யாத வீரன் தானடி
உன்கிட்ட நடப்பேனே தப்பா தானடி
ஒப்பேத்த மாட்டேண்டி கிட்ட வாடி

ஓ வீட்டுல மத்தவங்க
பாக்காதப்போ சீண்டுவ
பார்த்துட்டா சமாளிக்க
ஏதோ ஒன்ன நோண்டுவ

பார்ப்பேன் அப்ப பார்ப்பேன்
அந்த அசட்டு சிரிப்பதான்
ஆனா எதிர் பார்ப்பேன்
அந்த திருட்டு தனத்ததான்

ரொம்ப தான் அக்கறையா
வேலை எல்லாம் பாக்குற
அம்புட்டும் என்ன பார்க்க
வைக்க தானே செய்யுற

உங்க கண்ணு மட்டும் தாண்டி
வேற எங்கோ பாா்க்குது
ஆனா ஒடம்பெல்லாம்
என்னை கண்ணால் தாக்குது

அப்பப்பா காய்ச்சல் விட்டு போச்சு
அச்சச்சோ காதல் நோவு ஆச்சு

யே சொம்புல தண்ணி மொண்டு மேலு
கூச ஊத்துற நெஞ்சுல சாச்சு
வச்சு முந்தானையில் துவட்டுற


போதும் இது போதும்
பஞ்சு பஞ்சா பறக்குறேன்
நெஞ்சாங் குளிக்குள்ள
வந்து நீச்ச அடிக்குறேன்

செவ்வந்தி நெத்தி மேல
பச்ச குத்தி காட்டுனேன்
வெள்ளந்தி நெஞ்சுக்காரா
உன்னை வண்ணம் தீட்டுவேன்

நூறு ஜென்மம் போதாதையா
வேண்டி கெஞ்சுவேன் பாசம் அன்பில் தானே
பெத்த தாய மிஞ்சுவேன்

அப்பப்பா காய்ச்சல் விட்டு போச்சு
அச்சச்சோ காதல் நோவு ஆச்சு
முத்தத்தில் பத்து போடு தேச்சு
மொத்தத்தில் என்னை கஞ்சி காச்சு

பத்தியத்த முறிக்காத உங்க கையி
முப்பாலில் மூணாம் பால் சோ்த்து வையி
அப்பாவா நீயாகும் சேட்டை செய்யி

வெக்கத்த பக்கம் வந்து பாத்து
வீராப்பு மட்டு பட்டு போச்சு

Appappa Song Lyrics from movie Komban. Appappa song sung by Shreya Ghoshal, G. V. Prakash Kumar. Appappa Song Composed by G. V. Prakash Kumar. Appappa Song Lyrics was Penned by Mahalingam. Komban movie cast Karthi, Lakshmi Menon in the lead role actor and actress. Komban movie released on 2015