Ariyadha Vayasu

Ariyadha Vayasu Song Lyrics In English


இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

அறியாத வயசு புரியாத மனசு
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்
அடி ஆத்தி ரெண்டும் பறக்குதே
செடி போல ஆசை முளைக்குதே
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்

வெட்டவெளி பொட்டலில மழைவந்தா
இனி கொட்டாங்குச்சி குடையாக மாறிடும்
தட்டாம்பூச்சி வண்டியில சீர் வந்தா
இங்கே பட்டாம்பூச்சி வண்டியில ஊர்வரும்

ஓஹோ
அறியாத வயசு புரியாத மனசு
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்

பள்ளிக்கூடத்துல பாடம் நடத்தல
யாரும் மெனக்கெட்டு படிக்கல
எந்த கிழவியும் சொன்ன கதையில்ல
காட்டுல மேட்டுல காத்துல கலந்தது

உறவுக்கு இது தான் தலைம
இதை உசுரா நினைக்கும் இளம
காதலே கடவுளின் ஆண
அவன் பூமிக்கு தொட்டுவச்ச சேன


கொடமாத்தி நடமாத்தி
அடி ஆத்தி இந்த வயசுல
அறியாத வயசு புரியாத மனசு
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்

கறந்த பாலையே காம்பில் புகுத்திட
கணக்கு போடுதே ரெண்டும்தான்
கோர புல்லில மெட்டி செஞ்சுதான்
காலுல மாட்டுது தோளுல சாயுது

ஊரையும் உறவையும் மறந்து
நடு காட்டுல நடக்குது விருந்து
நத்தை கூட்டுல புகுந்து
இனி குடித்தனம் நடத்துமா சேர்ந்து

அடி ஆத்தி அடி ஆத்தி
அடி ஆத்தி இந்த வயசுல
அறியாத வயசு புரியாத மனசு
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்

அடி ஆத்தி ரெண்டும் பறக்குதே
செடி போல ஆசை முளைக்குதே
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்