Aththai Magal Rathinathai Female

Aththai Magal Rathinathai Female Song Lyrics In English


அத்தை மகள் ரத்தினத்தை
அத்தான் மறந்தாரா
அன்ன நடை சின்ன இடை
எல்லாம் வெறுத்தாரா
ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ ஓ ஓ ஓ
ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ ஆ ஆ ஆ

அத்தை மகள் ரத்தினத்தை
அத்தான் மறந்தாரா
அன்ன நடை சின்ன இடை
எல்லாம் வெறுத்தாரா

முத்து முத்துப் பேச்சு
கத்தி விழி வீச்சு
அத்தனையும் மறந்தாரா

முத்து முத்துப் பேச்சு
கத்தி விழி வீச்சு
அத்தனையும் மறந்தாரா
முன்னழகு தூங்க பின்னழகு ஏங்க
பெண்ணழகை விடுவாரா
பெண்ணழகை விடுவாரா

முத்திரையைப் போட்டு சித்திரத்தை வாட்டி
நித்திரையை கெடுப்பாரா
முத்திரையைப் போட்டு சித்திரத்தை வாட்டி
நித்திரையை கெடுப்பாரா
மூவாசை வெறுத்து ஊராரை மறந்து
முனிவரும் ஆவாரா

அத்தை மகள் ரத்தினத்தை
அத்தான் மறந்தாரா
அன்ன நடை சின்ன இடை
எல்லாம் வெறுத்தாரா


கொட்டு முழக்கோடு கட்டழகு மேனி
தொட்டு விட மனமில்லையா

கொட்டு முழக்கோடு கட்டழகு மேனி
தொட்டு விட மனமில்லையா
கட்டிலுக்கு பாதி தொட்டிலுக்கு பாதி
கருணை வரவில்லையா
கருணை வரவில்லையா

விட்டு பிரிந்தாலும் எட்டி நடந்தாலும்
கட்டாமல் விடுவேனா
விட்டுப் பிரிந்தாலும் எட்டி நடந்தாலும்
கட்டாமல் விடுவேனா
மேடைகளில் நின்று தோழர்களை கண்டு
சொல்லாமல் வருவேனா
ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ ஓ ஓ ஓ
ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ ஆ ஆ ஆ

அத்தை மகள் ரத்தினத்தை
அத்தான் மறந்தாரா
அன்ன நடை சின்ன இடை
எல்லாம் வெறுத்தாரா