Aththai Magalum Illai |
---|
ஓஒஓஓஓ ஓஓஓஒ
ஓஒஓஓஓ ஓஓஓஒஓ
அத்தை மகளும் இல்லை
அம்மான் மகளும் இல்லை
அத்தை மகளும் இல்லை
அம்மான் மகளும் இல்லை
ஆனாலும் உன் மீது
ஆசைக்கொண்டு ஏங்குகிறேன்
ஆஆஆஆஆஅ
ஆனாலும் உன் மீது
ஆசைக்கொண்டு ஏங்குகிறேன்
அத்தை மகளும் இல்லை
அம்மான் மகளும் இல்லை
சொந்தமில்லை நீ எனக்கு
பந்தமில்லை நான் உனக்கு
சொந்தமில்லை நீ எனக்கு
பந்தமில்லை நான் உனக்கு
இருந்தாலும் என்னுயிரேஏ
உன் வரவை தேடுகிறேன்
மேடை போடும் நாள் வருமோ
கடவுள் தந்த வாழ்வினிலே
மேடை போடும் நாள் வருமோ
கடவுள் தந்த வாழ்வினிலே
குங்கும உதட்டழகும்
கொடி போன்ற உடலசைவும்
சங்கு கழுத்தழகும்
கண்டு மனம் வாடுகிறேன்
அத்தை மகளும் இல்லை
அம்மான் மகளும் இல்லை
மானினமும் மீனினமும்
மை போடும் பெண்ணினமும்ம்ம்
மானினமும் மீனினமும்
மை போடும் பெண்ணினமும்
வாழைத் தோப்புக்குள்ளே
வந்திருக்க காணுகிறேன்
கரையேறி மீன் வருமோ
கை தேடி பால் வருமோ
இந்த ஜென்மம் இல்லையென்றால்ஆ
இந்த ஜென்மம் இல்லையென்றால்
மறு ஜென்மம் உன்னருகே
இருந்திட ஆண்டவனை
எப்போதும் வேண்டுகிறேன்
அத்தை மகளும் இல்லை
அம்மான் மகளும் இல்லை
ஆனாலும் உன் மீது
ஆசைக்கொண்டு ஏங்குகிறேன்
ஆஆஆஆஆஅ
ஆனாலும் உன் மீது
ஆசைக்கொண்டு ஏங்குகிறேன்
அத்தை மகளும் இல்லை
அம்மான் மகளும் இல்லை