Avalum Naanum

Avalum Naanum Song Lyrics In English


அவளும் நானும்
அமுதும் தமிழும் அவளும்
நானும் அலையும் கடலும்

அவளும் நானும்
தவமும் அருளும் அவளும்
நானும் வேரும் மரமும்

ஆலும் நிழலும்
அசைவும் நடிப்பும்
அணியும் பணிவும்
அவளும் நானும்

அவையும் துணிவும்
உழைப்பும் தழைப்பும்
அவளும் நானும்
அளித்தலும் புகழும்

மீனும் புனலும்
விண்ணும் விாிவும்
வெற்பும் தோற்றமும்
வேலும் கூரும்

ஆறும் கரையும்
அம்பும் வில்லும் பாட்டும்
உரையும் நானும் அவளும்

நானும் அவளும்
உயிரும் உடம்பும் நரம்பும்
யாழும் பூவும் மணமும்

அவளும் நானும்
தேனும் இனிப்பும் அவளும்
நானும் சிாிப்பும் மகிழ்வும்


அவளும் நானும்
திங்களும் குளிரும் அவளும்
நானும் கதிரும் ஒளியும்

அவளும் நானும்
அமுதும் தமிழும் அவளும்
நானும் அலையும் கடலும்

அவளும் நானும்
தவமும் அருளும் அவளும்
நானும் வேரும் மரமும்

ஆலும் நிழலும்
அசைவும் நடிப்பும்
அணியும் பணிவும்
அவளும் நானும்

அவையும் துணிவும்
உழைப்பும் தழைப்பும்
அவளும் நானும்
அளித்தலும் புகழும்

அவளும் நானும்
அமுதும் தமிழும்