Aymbathilum Aasai Varum

Aymbathilum Aasai Varum Song Lyrics In English


ஐம்பதிலும் ஆசை வரும் ஆசையுடன் பாசம் வரும் இதில் அந்தரங்கம் கிடையாதம்மா நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா

ஐம்பதிலும் ஆசை வரும் ஆசையுடன் பாசம் வரும் இதில் அந்தரங்கம் கிடையாதம்மா நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா

ஐம்பதிலும் ஆசை வரும்

என்றென்றும் பதினாறு போலே இருப்பது உன் மேனியே என்றென்றும் பதினாறு போலே இருப்பது உன் மேனியே

வீடு வரும் போது ஓடி வரும் மாது நினைவில் இன்னும் நிற்கின்றாள் ஆறு சுவை செய்தாள் அருகிலிருந்து தந்தாள் அன்பு மிக்க தாயாகின்றாள்

ஐம்பதிலும் ஆசை வரும் ஆசையுடன் பாசம் வரும் இதில் அந்தரங்கம் கிடையாதம்மா நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா


சம்சாரம் தன்னோடு பேச சுவர் ஏறி குதித்தேனம்மா சம்சாரம் தன்னோடு பேச சுவர் ஏறி குதித்தேனம்மா தாலி கட்டும் தாரம் வேலி கட்டினாலும் தனியே நினைத்தாள் துடிக்கின்றாள் காலம் என்ற ஒன்று கனிந்து வரும் போது கணவனுக்கே உயிராகின்றாள்

ஐம்பதிலும் ஆசை வரும் ஆசையுடன் பாசம் வரும் இதில் அந்தரங்கம் கிடையாதம்மா நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா

தெய்வத்தால் உருவான பந்தம் விலகாது மகராணியே தெய்வத்தால் உருவான பந்தம் விலகாது மகராணியே

பெற்றெடுத்த பிள்ளை கற்றுக் கொண்ட தொல்லை இடையில் இருக்கும் தடையாகும் செய்தவளும் நீதான் சேர்ந்தவளும் நீ தான் என்னிடத்தில் தவறில்லையே

ஐம்பதிலும் ஆசை வரும் ஆசையுடன் பாசம் வரும் இதில் அந்தரங்கம் கிடையாதம்மா நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா ஓ ஹோ நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா