Ayyayoo Yenna Solla

Ayyayoo Yenna Solla Song Lyrics In English


அய்யய்யோ என்ன சொல்ல நான்தானே
உன்ன அப்படியே அள்ளிகிட்டு போவேனே

ஹான் ஹான் ஹான் ஹான்
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

அய்யய்யோ என்ன சொல்ல நான்தானே
உன்ன அப்படியே அள்ளிகிட்டு போவேனே
அய்யய்யோ என்ன சொல்ல நான்தானே
உன்ன அப்படியே அள்ளிகிட்டு போவேனே

உன்னோட பேசும்போது
வாழ தோணுதே
கண்ணோடு கண்ணும் மோத
காரம் ஏறுதே
அடியே நீ தலை ஆட்ட
ஏதோ ஆகுதே
ஏதோ ஆகுதே

அய்யய்யோ என்ன சொல்ல நான்தானே
என்ன அப்படியே அள்ளிகிட்டு போனியே

இன்னும் கொஞ்சம் நேரம்
என்ன நடந்தாலும்
ரெண்டு பெரும் தோளில் சாய்ந்து
பேச வேணுமே

என்னுடைய பார்வை
அங்க இங்க மீய
செல்லம் நீயும் கோவத்தோட
கூச வேணுமே

மழை காத்து அடிச்சாலும்
வெயில் தீயில் எரிச்சாலும்
உறங்காத ராத்திரி வேணுமே

தவறே நான் புரிஞ்சாலும்
சரி வாட என்ன தேத்த
ஒரு முத்தம் வேணுமே
மொத்தம் வேணுமே

அய்யய்யோ என்ன சொல்ல நான்தானே
என்ன அப்படியே அள்ளிகிட்டு போவேனே




ஒத்த நொடி கூட
உன்ன பிரியாம
ஒத்துமையா காதல் பாட்டு
கேக்க வேணுமே

உள்ள வரை தோதா
உன்னை மடி சாச்சு
அன்னம் அத போல
என்ன ஊட்ட வேணுமே

அடி நானும் சமைப்பேனே
துணிகூட துவைப்பேனே
அத பார்த்து நீ திட்ட வேணுமே

பணம் வேணும் நக வேணும்
என கேட்டு அழ மாட்டேன்
அளவில்லா அன்புதான் இன்னும் வேணுமே

ஹே அய்யய்யோ என்ன சொல்ல நான்தானே
உன்ன அப்படியே அள்ளிகிட்டு போவேனே

ம்ம்அய்யய்யோ என்ன சொல்ல நான்தானே
என்ன அப்படியே அள்ளிகிட்டு போனியே

உன்னோட பேசும்போது
வாழ தோணுதே
கண்ணோடு கண்ணும் மோத
காரம் ஏறுதே

அடியே நீ தலை ஆட்ட
ஏதோ ஆகுதே
ஏதோ ஆகுதே