Azhagai Pookuthe

Azhagai Pookuthe Song Lyrics In English


அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே அடடா
காதலில் சொல்லாமல்
கொள்ளாமல் உள்ளங்கள்
பந்தாடுதே

ஆசையாய் பேசிட
வார்த்தை மோதும் அருகிலே
பார்த்ததும் மௌனம் பேசும்
காதலன் கைச்சிறை காணும்
நேரம் மீண்டும் ஓர் கருவறை
கண்டதாலே கண்ணில் ஈரம்

அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே அடடா
காதலில் சொல்லாமல்
கொள்ளாமல் உள்ளங்கள்
பந்தாடுதே

கடவுளின் கனவில்
இருவரும் இருப்போமே
ஓஹோ கவிதையின் வடிவில்
வாழ்ந்திட நினைப்போமே
ஓஹோ

இருவரும் நடந்தால்
ஒரு நிழல் பார்ப்போமே
ஓஹோ ஒரு நிழல் அதிலே
இருவரும் தெரிவோமே
ஓஹோ

சிலநேரம் சிரிக்கிறேன்
சில நேரம் அழுகிறேன்
உன்னாலே

அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே அடடா
காதலில் சொல்லாமல்
கொள்ளாமல் உள்ளங்கள்
பந்தாடுதே


ஒருமுறை நினைத்தேன்
உயிர்வரை இனித்தாயே ஓஹோ
மறுமுறை நினைத்தேன் மனதினை
வதைத்தாயே ஓஹோ

சிறு துளி விழுந்து
நிறைகுடம் ஆனாயே ஓஹோ
அரை கணம் நொடியில் நரை
விழ செய்தாயே ஓஹோ

நீ இல்லா நொடி
முதல் உயிர் இல்லா
ஜடத்தைப்போல் ஆவேனே

அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே
ஆண் & அடடா
காதலில் சொல்லாமல்
கொள்ளாமல் உள்ளங்கள்
பந்தாடுதே

அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே அடடா
காதலில் சொல்லாமல்
கொள்ளாமல் உள்ளங்கள்
பந்தாடுதே

ஆசையாய் பேசிட
வார்த்தை மோதும் அருகிலே
பார்த்ததும் மௌனம் பேசும்
காதலன் கைச்சிறை காணும்
நேரம் மீண்டும் ஓர் கருவறை
கண்டதாலே கண்ணில் ஈரம்