Azhage Azhage

Azhage Azhage Song Lyrics In English


அழகே அழகே என்னோடு வா
அழகே அழகே என்னோடு வா
காதல் மோகம் பார்வையாலே தீராது
அட இதுதான் முதல் முறை
இனி மேல் வளர் பிறை இளமை தாங்காது

அழகே அழகே என்னோடு வா

இவள் ஆடை கலைந்தது
தேகம் மலர்ந்தது
ஆஹா முதல் வசந்தம்

இன்று மீண்டும் உனை வந்து
தீண்டும் விரல் அது
உயிரின் வரை உரசும்

இவள் ஆடை கலைந்தது
தேகம் மலர்ந்தது
ஆஹா முதல் வசந்தம்

இன்று மீண்டும் உனை வந்து
தீண்டும் விரல் அது
உயிரின் வரை உரசும்

அழகே வந்தாய் நீயும் நீராக
எந்தன் பெண்மை பூவாக

நாமே நிலமாக
இன்பக் காதல் பயிராக

அழகே அழகே என்னோடு வா

இங்கு நாளை மறு முறை
நீயும் வரும் வரை
கண்கள் துடித்திருக்கும்


என் கண்ணா இரவினில்
ஏழை இருதயம்
மேளம் அடித்திருக்கும்

இங்கு நாளை மறு முறை
நீயும் வரும் வரை
கண்கள் துடித்திருக்கும்

என் கண்ணா இரவினில்
ஏழை இருதயம்
மேளம் அடித்திருக்கும்

ரதியே காதல் என்றும்
மர்மம்தான்
நாணம் பெண்ணின் தர்மம்தான்

தோளில் தலை சாயும்
இந்த நேரம் மௌனம்தான்

அழகே அழகே என்னோடு வா
அழகே அழகே என்னோடு வா
காதல் மோகம் பார்வையாலே தீராது

அட இதுதான் முதல் முறை
இனிமேல் வளர்பிறை இளமை தாங்காது

இருவர் : அழகே அழகே என்னோடு வா